வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 2 ஜூன், 2011

கடந்த 7.5.2011. சனிக்கிழமை பி.பி.சி. தமிழோசையில் எனது சிறு மடல்[ ஆடியோ இணைப்பு]

லங்கைப் போரின் இறுதி கட்டத்தில் நிகழ்ந்த விடயங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலருக்கு ஆலோசனை கூற அமைக்கப்பட்ட மூவர் குழுவின் அறிக்கையில் புலம் பெயர்ந்து வாழும் புலி ஆதரவு தமிழர்களின் செயல்பாடுகளும் கணிசமாக விமர்சிக்கப்பட்டுள்ளன. என்கின்ற செவ்வியில்
உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண. இமானுவேல் அவர்களின் பதில். இல்லை இல்லை என்று எதையும் ஏற்றுக்கொள்ளாத இவரைப்போன்ற புலிகளின் தெளிவில்லாத அரசியல் நோக்கும் தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்குப் படக்கு என்று அடிக்குமாம் என்பது போலுள்ளது அடுத்து இவரது கருத்து சிங்கள் மக்கள் தங்கள் நாட்டுக்குள் வந்து குண்டுகளை வீசியதாகவும் இது தமிழ் மக்களின் போராட்டம் என்றும் தெளிவு இல்லாமல் கூறுகின்றார் ஐயாவுக்கு தெரியாதா 1970 களில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்களின் நியாயமான உரிமைப் போராட்டம் 1980 களில் ஆயுதப் போராட்டமாக உருப்பெற்று 1986 ஆண்டுக்குப் பின்னரான மற்றைய இயக்கங்களின் அழிப்புக்கு பின் புலிகளின் சுயனலப்போராட்டமாக மாற்றப்பட்டு இன்று சுமார் 38 வருடங்களை எட்டிய நிலையில் இத்தனை காலமும் ஓங்கிஒலித்த குரல்கள் ஓய்ந்திருக்கின்றன. புலி என்ற போர்வைக்குள் பலியாக்கப்பட்ட மக்களும் மக்கள் முகங்களில் மயான அமைதி: மனங்களில் குமுறல்கள். ஆதரவு சொல்வதற்கென யாருமில்லை. தமக்கென ஒரு இராஜ்யத்தை அமைத்து ஓர் இராணுவக்கட்டமைப்பை உருவாக்கி வீரவேங்கை தொட்டு பிரிகேடியர் வரை பட்டங்கள் கொடுத்து மாவீரர் என மகுடம் சூட்டி வழியனுப்பி வைத்தவரை வழியனுப்ப யாருமின்றி.. என்ன நடந்தது? ஏது நடந்தது ? கொஞ்சம் சிந்தியுங்கள் தயவு செய்து இனியாவது சிந்தியுங்கள் மாற்றுக்கருத்தையும் உணமைளையும் ஏற்றுக்கொள்ளுங்கள் தமிழ் மக்களுக்கு நியாம் கிடைக்க

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’