கி ளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற உட்கட்டுமானப் பணிகளுக்கும், மக்களின் வீட்டுத்திட்டங்களுக்கும் கிறவல் மற்றும் மணல் ஆகியவற்றைப் பெறுவதில் இருந்துவந்த நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்களின் தலைமையில் கிளிநொச்சி அரச செயலகத்தில் இன்று (31) கலந்துரையாடல் இடம்பெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இந் நிகழ்வுக்குத் தலைமை தாங்கி உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் இந்த மாவட்டத்தின் வளங்கள் இந்த மாவட்டத்தினதும் இம்மாவட்ட மக்களினதும் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு முழுமையாகப் பயன்படுத்தப்படல் வேண்டும். அத்தோடு சுற்றுச் சூழலைக் கருத்தில் எடுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். சட்டத்திற்கு புறம்பாக மணல் கிறவல் அகழ்வுகளில் ஈடுபடுகின்றவர்கள் மீது பொலிஸார் உடனடி சட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் தயங்கக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும் இன்றுவரை மணல் கிறவல்கள் ஆகியவற்றை அபிவிருத்திப் பணிகளுக்கும், மக்களின் தேவைகளுக்கும் பெற்றுக் கொள்வதற்கு பல்வேறு சிரமங்களும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களும் இருந்து வருகின்றன. இனி அவ்வாறான நடைமுறைச்சிக்கல்கள் இன்றி சீரான நடைமுறைகளைப் பேணவேண்டும். அந்த வகையில் மணல் கிறவல்கள் பெறுகின்ற போது அனுமதி பெற்ற கிராம அபிவிருத்திச் சங்கங்கள் கிராம அலுவலர்கள் பிரதேச செயலாளர்கள் அரச அதிபர் உழவு இயந்திர உரிமையாளர் சங்கம் உள்ளிட்டவர்களின் அனுமதிகளுக்கு ஊடாக கனியவளத் திணைக்களத்தின் அனுமதி பெறப்பட்டே செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதற்கு மாறாக செயற்படுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கப்பட வேண்டும். மேலும் கனிய வளத் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் தங்களுடைய சீரான நடமாடும் சேவையினை எதிர்வரும் மாதம் முதல் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டன.
அத்தோடு மணல் கிறவல் அகழ்வு நடைமுறைகள் ஒழுங்குகள் பின்பற்றப்படுகிறதா என்பதனை கண்காணிப்பதற்கு கண்காணிப்பு உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து அபிவிருத்திப் பணிகளும் தடங்கல்கள் இன்றி இடம்பெறுவதற்கு சீரான மணல் கிறவல் விநியோகம் சுற்றுச் சூழலை கருத்தில் எடுத்து இடம்பெற வேண்டும் எனவும் இணக்கம் காணப்பட்டது.
இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் கரைச்சி பளை கண்டாவளை பூநகரிப் பிரதேச செயலாளர்களான நாகேஸ்வரன் முகுந்தன் சத்தியசீலன் வசந்தகுமார் அரச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கேதீஸ்வரன் கனியவளத் திணைக்கள அகழ்வு பொறியியலாளர் லோககௌரி அதன் கள உத்தியோகத்தர்கள் கிராம அலுவலர்கள் பொலிஸ் அதிகாரிகள் மக்கள் அமைப்பு பிரதிநிதிகள் உழவு இயந்திர சங்கத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’