இ லங்கை போர்க்குற்ற ஆவணங்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் சனல் 4 தொலைக்காட்சி அவ் ஆவணத் தொகுப்பினை திரைப்படமாக்கி எதிர்வரும் 14 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடவுள்ளது.
ஒரு மணித்தியாலத்தை அடக்கிய இப் போர்க்குற்ற ஆவணத்தொகுப்பு திரைப்படத்தினை எதிர்வரும் 3 ஆம் திகதி ஐ. நா மனித உரிமைகள் பேரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளது.
சனல் 4 ஊடகம் இத் திரைப்படத்தினை எதிர்வரும் 14 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.
இது வரையில் வெளியிடப்படாத போர்க்குற்ற ஆவணங்களும் இத் திரைப்படத்தில் அடங்குவதாகவும் போரினால் பாதிப்புற்றோரின் வாக்குமூலங்கள் நேரடிச் சாட்சியங்கள் ஆகியனவும் இத் திரைப்படத்தில் அடங்குவதாகவும் தெரிவித்துள்ளது.
இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றமைக்கான ஆதாரமாக அமைந்த சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளிகள் அனைத்தும் உண்மையானவை என்று நீதிக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் சித்திரவதைகள் குறித்த ஐ. நா.வின் சிறப்பு அறிக்கையாளர் கிறிஸ்ரொப் ஹெய்ன்ஸ் கூட்டத் தொடரில் அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’