வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 2 ஜூன், 2011

வன்னியிலேயே படையினருக்கு அதிக இழப்பு ஏற்பட்டது: மேஜர் ஜெனரல் முனசிங்க

2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டுவரை இடம்பெற்ற பயங்கரவாதத்திற்கு எதிரான மனிதாபிமான யுத்தத்தில் வன்னிப்பகுதியிலேயே படையினருக்கு அதிகளவான உயிர் இழப்பு ஏற்பட்டது என இராணுவ மருத்துவ பிரிவுக்கு பொறுப்பாகவிருந்த மேஜர் ஜெனரல் எஸ்.எச்.முனசிங்க தெரிவித்தார்.

பயங்கரவாதத்தினை தோற்கடித்தமை மூலம் தாம் பெற்றுக்கொண்ட அனுபவங்களை சர்வதேசத்துடன் பகிர்ந்துகொள்ளும் மூன்றுநாள் கருத்தரங்கில் மருத்துவ உதவிகள் தொடர்பாக விளக்கமளித்த மேஜர் ஜெனரல் எஸ்.எச்.முனசிங்க மேலும் கூறுகையில்...
'இறுதி யுத்தம் மிகவும் கடுமையாக இடம்பெற்றது. படையினருக்கு ஏற்பட்ட காயங்களுக்கு மருந்திடுவதில் பாரிய சவால்களை நாங்கள் எதிர்கொண்டோம். 2006ஆம் ஆண்டு எங்களிடம் 108 இராணுவ வைத்தியர்கள் மாத்திரமே இருந்தார்கள். அதன்பின்னர் பலரை நாங்கள் பயிற்றுவித்தோம். யுத்தம் நடைபெற்ற களத்தில் இராணுவ மருத்துவர்களின் பங்கு பெருமளவில் இருந்தது. பயிற்றப்பட்ட வைத்தியர்களினாலும் உதவியாளர்களினாலும் பாரிய உயிர் இழப்பு தவிர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கிலே ஆரம்பித்த யுத்தம் வன்னியில் நிறைவடைந்தது. கிழக்கிலும் பார்க்க வன்னியிலேயே படையினருக்கு பாரிய உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டன. கிழக்கில் 5.15 வீதமான உயிர்ச்சேதம்தான் நிகழ்ந்தது. ஆனால் வன்னியில் 78.5 வீதமான உயிர்ச்சேதம் பதிவாகியுள்ளமை துரதிர்ஷ்டவசமானது.
அடர்ந்த காடு, திறந்த வெளி, சகதி நிலங்கள் என பல முனைகளில் எமது படையினர் போராடவேண்டிய நிலை காணப்பட்டது. இதனால் தான் அதிகளவான உயிர்ச்சேதங்களை படையினர் எதிர்கொள்ள நேர்ந்தது. குண்டு வெடிப்புகளின் மூலம்தான் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. 59.6 வீதமான உயிரிழப்பு குண்டுவெடிப்புகளினால்தான் ஏற்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 39.9 வீதமான படையினர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர்.
குண்டு வெடிப்பில் மூலமான உயிரிழந்தவர்களில் அதிகமானவர்கள் புலிகளின் ஆட்லரி தாக்குதலுக்கு இலக்காகியவர்கள். இந்த குண்டு வெடிப்புகளில் ஆட்லரி குண்டு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தவர்கள் 81.2 வீதமானவர்கள். எதிரிகளின் ஆட்லரி தாக்குதல் எமக்கு பெரும் சவாலாக அமைந்திருந்தது' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’