த ன்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்றதாக கூறப்படும் ஆணின் ஆணுறுப்பை பெண்ணொருவர் கத்தியால் வெட்டித் துண்டித்துள்ளதுடன் அதனை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்று அந்த நபருக்கெதிராக முறைப்பாடு செய்த சம்பவம் பங்களாதேஷில் நடைபெற்றுள்ளது.
மொஞ்சு பேகம் எனும் 40 வயதான பெண்ணே இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார். மொஹெம்மெல் ஹக் மெஸி என்ற நபர் தன்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்றதாகவும் அதற்கு பயந்து தான் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டதாகவும் பொலிஸாரிடம் அப் பெண் தெரிவித்துள்ளார்.
அப்பெண் குறித்த நபரின் ஆணுறுப்பை பொலித்தின் பையிலிட்டு எடுத்துச் சென்று பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
அந்நபர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் தன் மீதான குற்றச்சாட்டை நிராகரித்து வருகின்றார்.
தலைநகர் டாக்காவிலிருந்து 100 கிலோமீற்றர் தொலைவிலுள்ள மீர்ஸாபூர் எனும் நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அப்பெண் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது அம்மனிதர் வீட்டினுள்ளே நுழைந்து அப்பெண்ணை வல்லுறவுக்குட்படுத்த முயன்றதாக பொலிஸ் உயரதிகாரியான அப்துல் காயெர் கூறியுள்ளார்.
3 பிள்ளைகளின் தாயான அப்பெண்ணுடன் தனக்கு காதல் தொடர்பு இருந்தாகவும் ஆனால் அந்தப் பெண்ணை திருமணம் செய்து வாழ தான் மறுத்ததால் அப்பெண் தன்னை இவ்வாறு தாக்கியதாகவும் மெஸி தெரிவித்தார். ஏற்கெனவே திருமணமான இவர் 5 பிள்ளைகளின் தந்தையாவார்.
'தன்னை திருமணம் செய்துகொண்டு டாக்கா நகரில் வசிக்க வருமாறு அவர் கோரினார். நான் எனது மனைவி பிள்ளைகளை விட்டுச் செல்ல முடியாது என அப்பெண்ணிடம் கூறினேன். அதனால் அவர் என் மீது வஞ்சம் தீர்த்துக்கொண்டார்' என மெஸி கூறியுள்ளார்.
மேற்படி நபர் குணமடைந்தவுடன் கைது செய்யப்படுவார் என பொலிஸ் அதிகாரி அப்துல் காயெர் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’