வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 18 ஜூன், 2011

காரைநகர் உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்கான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்!

யா ழ் மாவட்டத்தை முன்பிருந்ததைவிட பலமடங்கு முன்னேற்றுவதே எனது எதிர்பார்ப்பாகும். இந்த முயற்சிக்கு எமது மக்கள் அனைவரும் தங்களது முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக் கொண்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்றைய தினம் (17) காரைநகர் உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் குழுவின் தலைவர் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்) தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடி எட்டப்படுகின்ற முடிவுகள் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் என்றும் எனவே பொதுமக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொது அமைப்புக்கள் இப்பிரதேச அபிவிருத்தி தொடர்பில் உரிய கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைக்க வேண்டும் என்றும் அதே நேரம் இப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் உரிய முறையில் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இன்றைய தினம் வீதிகள் அபிவிருத்தி மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் புனரமைக்கப்பட வேண்டிய வீதிகள் குறித்தும் தற்போது புனரமைப்புச் செய்யப்படுகின்ற வீதிகள் குறித்தும் விஷேட அவதானங்கள் செலுத்தப்பட்டன. அத்துடன் மூடப்பட்டிருக்கும்மதகுகள் குறித்தும் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு உரிய தரப்பினருக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.

வீதி மின்விளக்குகளை உடனடியாகப் பொருத்துவதற்கு ஆலோசனை வழங்கியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விவசாயத்துறை சார்ந்த தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராய்ந்தார்.

கட்டாக்காலி கால்நடைகளின் பிரச்சினை பெரும் பிரச்சினையாக பலராலும் பிரஸ்தாபிக்கப்பட்டதையடுத்து இதற்குரிய நடவடிக்கையினை உரிய அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து மேற்கொள்ளுமாறு பிரதேச சபை செயலாளருக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.

கடற்தொழில் குறித்து ஆராயப்பட்ட போது கடற்படையினர் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளும்முகமாக இன்றைய தினம் மாலை விஷேட கலந்துரையாடலொன்றுக்கு அமைச்சர் அவர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளார்.

சுகாதாரம் போக்குவரத்து கல்வி காணி வீட்டுத் திட்டங்கள் போன்ற விடயங்களும் இன்றைய தினம் விரிவாக ஆராயப்பட்டன.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அலுவலகத் தளபாடங்கள் விளையாட்டு உபகரணங்கள் போன்றவற்றை பொது அமைப்புகளுக்கும் விளையாட்டுக் கழகங்களுக்கும் வழங்கினார்.

மேற்படி உபகரணங்கள் அமைச்சர் அவர்களினதும் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்களினதும் பன்முகப்படுத்தப்பட்ட நிதியால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

























0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’