வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 20 ஜூன், 2011

அகதிகள்-'மேலை நாடுகளின் பீதி அர்த்தமற்றது

லக அகதிகளில் ஐந்தில் நான்கு சத வீதத்தினர் வறிய நாடுகளிலேயே வசிப்பதாக ஐநா கூறுகிறது.
ஐநாவின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அன்டோனியோ குத்தரெஸ், மேற்குலக நாடுகள் வெளிநாட்டவர்களின் குடியேற்றத்தால் அடிக்கடி தேவைக்கதிகமாகவே பீதியடைவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.


ஜூன் 20ம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட சர்வதேச அகதிகள் தினத்தை முன்னிட்டு ஐநாவின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உலகில் இப்போது அகதிகள் என பதிவாகியுள்ள ஒரு கோடியே 54 லட்சம் பேரில் 80 வீதமானோர் வறிய நாடுகளிலேயே தஞ்சம்பெற்றுள்ளனர்.
குறிப்பாக பாகிஸ்தான் இந்தப் பணியில் முன்னணியில் உள்ளது. சுமார் பத்தொன்பது லட்சம் வெளிநாட்டு அகதிகளை அந்த நாடு பராமரிக்கின்றது.
1979இல் ரஷ்யப் படையெடுப்பின்போது,முதற் தடவையாக புலம்பெயரத் தொடங்கிய ஆப்கனியர்கள் 2001ம் ஆண்டு மற்றும் 2010ம் ஆண்டு கணக்குகளின்படி, உலக அகதிகள் சனத்தொகையில், மூன்றில் ஒரு பங்கினராக இருக்கின்றனர்.
வறிய நாடுகளில் வெளிநாட்டு அகதிகளின் இந்த பெருஞ்சுமையால் ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடிகள் குறித்து உலகின் கவனத்தை திருப்ப வேண்டிய நிலையில் ஐநாவின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் இருக்கின்றது,
அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் தனியாக இந்த சுமையை பொறுக்க முடியாது என்பதைச் சுட்டிக்காட்டும் யூஎன்எச்சீஆர், இந்த நிலைமையை சமப்படுத்தும் நடவடிக்கைகளை வளர்ந்த நாடுகள் முன்னெடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’