வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 3 ஜூன், 2011

புதிய வகையான இராஜதந்திர சேவை வேண்டும் : ஜனாதிபதி

பா ரம்பரிய இராஜதந்திர சேவைகளுக்குப் பதிலாக, நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவக்கூடிய புதிய வகையிலான இராஜதந்திர சேவை எமக்கு வேண்டும்' என ஜனாதிபதி கூறினார்.
4 உயர் ஸ்தானிகர்கள் உட்பட 17 புதிய தூதுவர்களுக்கான நியமனக் கடிதங்களை கையளிக்கும் வைபவம் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றபோதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார்.
இராஜதந்திர சேவையிலுள்ள உத்தியோகஸ்தர்கள் நாட்டின் நிலைமை குறித்த சிறந்த அறிவுள்ளவர்களாக, அந்தந்த நாடுகளிலிருந்து இந்நாட்டுக்கு பெறக்கூடிய விடயங்களை அடையாளம் காணக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். இந்நாட்டின் படித்த இளைஞர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளையும் அவர்கள் தேட வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறினார்.
அந்த நாடுகளிலுள்ள செல்வாக்குள்ள சமூக குழுக்களுடன் உறவுகளைப் பலப்படுத்துவதுடன் நாடு குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ள குழுக்களினால் ஏற்படுத்தப்பட்ட தவறான அபிப்பிராயங்களை நீக்குவதும் அவசியம் என அவர்கூறினார்.

17 புதிய தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் விபரம் பின்வருமாறு:

அசித பெரேரா (இத்தாலி), திஸ்ஸ விஜேரட்ன (தென் கொரியா), சி.ஏ.எச்.எம். விஜேரட்ன (குவைத்), பி.ஜி.ஆர். உயன்கொட, (சீனா), ஏ.எல்.ஏ. அஸீஸ் (ஆஸ்திரியா,) ஜயந்த பலிபான (கட்டார்), எம்.ஏ.கே. கிறிரிஹகம, (ஓமான்), எம்.ஆர். குணரட்ன, (லெபனான்), புத்தி கே. அதாவுட (நெதர்லாந்து), சரத் கோங்கஹகே, (ஜேர்மனி), எச்.ஆர். பிரியசிறி (மியன்மார்), ஜெனரல் சாந்த கோட்டகொட (தாய்லாந்து), ஒஷாதி அலகப்பெரும (சுவீடன்), ஆர்.ரவீந்திரன் (கென்யா), அட்மிரல் திசேரா சமரசிங்க (அவுஸ்திரேலியா), கல்யானந்த கொடகே (மலேஷியா), பேரியல் அஷ்ரப் (சிங்கப்பூர்).

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’