உ ண்மையை உலகிற்கு கூறிவருவதால் யுத்தம் நடைபெற்ற காலத்திலிருந்து இன்றுவரை பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறேன் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
பயங்கரவாதத்தினை தோற்கடித்தமை மூலமாக இராணுவத்தினர் கற்றுக்கொண்ட அனுவபங்களை சர்வதேசத்துடன் பகிர்ந்துகொண்ட மூன்றுநாள் கருத்தரங்கு நேற்றுடன் முடிவடைந்துள்ளது. நேற்றைய இறுதிநாள் கருத்தரங்கில் தனது கருத்துக்களை பகிர்ந்துகொள்வதற்கு தானாகவே அனுமதி கேட்டு உரையாற்றும்போதே யாழ். மாவட்ட அரச அதிபர் மேற்படி தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்...
'உண்மைகளை உள்ளபடி உலகுக்கு எடுத்துக் கூறுவதால் பல பிரச்சினைகளுக்கு நான் முகம் கொடுக்கிறேன். இப்பொழுதும் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலின் மத்தியிலேயே நான் வாழ்கிறேன். இருந்தபோதிலும் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பின் மத்தியில் மக்கள் சேவை செய்யக்கிடைத்திருக்கின்றமையால் மகிழ்ச்சியடைகிறேன்.
2002ஆம் ஆண்டு தொடக்கம் 2010ஆம் ஆண்டுவரை முல்லைத்தீவு அரச அதிபராக நான் கடமையாற்றியிருக்கிறேன். இறுதிக்கட்ட யுத்தத்தின்போதும் நான் அங்குதான் கடமையாற்றினேன். புலிகளின் பிடிக்குள் மக்கள் சிக்கித்தவித்த காலத்திலும் மக்களின் நலனில் அரசு கவனம் செலுத்தி வந்தது. குறிப்பாக எங்களுக்கு உயர்மட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. குறைந்தது மூன்று மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை கையிருப்பில் வைத்துக்கொள்ளுமாறு பணிக்கப்பட்டோம். அதுமட்டுமல்லாமல் ஆறு மாதங்களுக்கு தேவையாக மருந்துப் பொருட்களையும் சேமித்து வைக்குமாறு கேட்கப்பட்டிருந்தோம். யுத்தம் நடைபெற்ற காலத்திலும் மக்களின் நலனில் அரச அதிகாரிகளும் படைகளும் அக்கறை செலுத்தினார்கள் என்பதற்று இது நல்லதொரு எடுத்துக்காட்டு.
இறுதி யுத்த காலகட்டத்தில் மக்களை வெளியேற்றுமாறு படையதிகாரிகள் என்னைக் கேட்டுக்கொண்டார்கள். ஆனால் என்னால் அதனை செய்யமுடியவில்லை. காரணம் விடுதலைப் புலிகள் அப்பாவி பொதுமக்களை மனித கேடயங்களாக பிடித்து வைத்திருந்தமையே. வெளியேற துடித்த அப்பாவி பொதுமக்களை விடுதலைப் புலிகள் வெளியேறாமல் தடுத்தனர்.
மக்களின் பயன்பாட்டுக்காக மனிதாபிமான அடிப்படையில் இராணுவத்தினரால் வழங்கப்பட்ட சீமெந்துகளையும் ஜெனரேற்றர்களையும் புலிகளே அதிகளவில் பயன்படுத்தினர். பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட சீமெந்து பக்கெட்டுகளில் தங்களின் பாதுகாப்பிற்காக பதுங்கு குழிகளை புலிகள் அமைத்தனர். அதேபோல் ஜெனரேற்றர்களையும் அவர்களே பயன்படுத்தினார்கள்.
இருந்தபோதிலும் அமைதியாக இருந்து மக்கள் சேவையினை நாங்கள் செய்துவந்தோம். இதற்காக படையினருக்கு நான் நன்றிசொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இராணுவத்தினர் மிகவும் மனிதாபிமானத்துடனும் ஒழுக்கமாகவும் நடந்துகொண்டனர். இதனால் தான் மக்கள் சேவையினை எங்களால் தொடர்ந்து செய்ய முடிந்தது. நான் முல்லைத்தீவில் அரச அதிபராக கடமையாற்றிய எட்டு வருடங்களில் 7,000 குடும்பங்களுக்கு வீடுகளை பெற்றுக் கொடுத்திருக்கிறேன். 22,000 குடும்பங்கள் வாழ்ந்த பிரதேசத்தில் குறிப்பிட்ட காலத்தில் 7,000 குடும்பங்களுக்கு வீடுகளை பெற்றுக்கொடுத்தமை அரசாங்கத்தின் நல்லெண்ணத்துக்கு தக்க சான்றாக அமையும். அதுமட்டுமல்லாமல் பெருமளவிலான அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் பாரியளவில் நிதியுதவி செய்திருந்தது. அந்த நிதியுதவியினைக் கொண்டு ஏராளமான அபிவிருத்தி நடவடிக்கைளை முன்னெடுத்தோம். இந்த அபிவிருத்திகள் தொடர்பாக மாதாந்த அறிக்கைகளை நான் அரசுக்கு வழங்கிவந்தேன். புலிகளின் மறைந்த தலைவர்களில் ஒருவரான தமிழ்ச்செல்வன் என்னை பலமுறை பயமுறுத்தியிருக்கிறார். எக்காரணம் கொண்டும் அபிவிருத்தி பற்றிய அறிக்கைகளை யாருக்கும் வழங்க வேண்டாம் என்று அவர் என்னை அச்சுறுத்தினார். அரசு செய்கின்ற அபிவிருத்தி நடவடிக்கைகளை வெளிக்கொணர்ந்தால் தங்களின் இயக்கத்துக்கு அவப்பெயர் வரும் என அவர்கள் அஞ்சினார்கள்.
அன்றும் எனது சேவையினை சரிவர செய்யவிடாமல் அச்சுறுத்தினார்கள். இன்றும் என்னை அச்சுறுத்துகிறார்கள். ஆனால் படையினரின் உதவியுடன் இன்றும் என்னால் மக்கள் சேவையினை செய்யக்கூடியதாக இருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். நாங்கள் மக்கள் சேவகர்கள். ஆகையினால் எங்களால் முடிந்தளவு மக்களுக்கு சேவை செய்யவே விரும்புகிறோம்.
இப்பொழுதும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறோம். கல்வி நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தி வருகிறோம். இப்பொழுது சுமுகமான நிலை காணப்படுவதற்கு உதவிய படையினருக்கு நான் நன்றிசொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்...' என்று அவர் உரையாற்றினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’