வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 17 ஜூன், 2011

லங்கா சிமென்ட் தொழிலாளர்களுக்கான நட்டஈடு - அமைச்சர் வழங்கினார்

ங்கா சிமென்ட் நிறுவனத்தில் பணியாற்றி பணி இடை நிறுத்தப்பட்டிருந்த 57 தொழிலாளர்களுக்கான நட்டஈட்டுத் தொகையின் இரண்டாம் கட்டக் கொடுப்பனவுகள் இன்றைய தினம் (16) மாலை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் வழங்கி வைக்கப்பட்டன. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
மேற்படி தொழிலாளர்கள் விடுத்திருந்த வேண்டுகோளுக்கமைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகள் காரணமாக இத் தொழிலாளர்களுக்குரிய முதலாம் கட்ட நட்டஈட்டுத் தொகை ஒரு கோடியே 27 இலட்சம் ரூபா ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த நிலையில் இரண்டாம் கட்ட இறுதிக் கொடுப்பனவுகள் இன்றைய தினம் யாழ் திணைக்களத்தில் வைத்து வழங்கப்பட்டன.

இதன்படி ஒரு கோடியே 21 இலட்சம் ரூபாவினை 57 தொழிலாளர்களுக்கும் அவர்களுக்குரிய நட்டஈட்டுத் தொகைகளுக்கேற்ப வழங்கப்பட்டது.

உதவித் தொழில் ஆணையாளர் திருமதி நீலலோஜினி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரையாற்றும் போது யாழ் மாவட்டத்தில் பல்வேறு தொழிற்துறைகளை மீளக் கட்டியெழுப்புவது குறித்து சுட்டிக் காட்டினார். அத்துடன் புதிய பல தொழிற்துறைகளையும் ஆரம்பிக்க இருப்பதாகத் தெரிவித்த அமைச்சர் அவர்கள் சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பது தொடர்பாக விரிவாக ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.















0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’