வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 17 ஜூன், 2011

ஐநாவுக்கு வானூர்திகளை வழங்கும் இலங்கை

நாவுக்கு வை 12 மற்றும் எம்.ஐ 24 ரக தாக்குதல் ஹெலிகொப்டர்கள் அடங்கலாக சில வானூர்திகளை கொடுக்க இலங்கை முன்வந்துள்ளது.

சுடான், காங்கோ போன்ற நாடுகளில் அமைதிகாக்கும் பணிகளிலும் யுத்த நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ள ஜநா படைகள், இராணுவ தளபாடங்களுக்கு பெரும் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ள நிலையிலேயே, இலங்கை தன்பங்கிற்கு, தன்னிடமுள்ள சில வானூர்திகளை வழங்க முன்வருவதாக அறிவித்திருந்தது.
இறுதிக் கட்டப் போர் வேளையில் இலங்கைப் படையினர் பெரும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில், ஐநாவுடனான உறவை சீர் செய்யும் முயற்சியாகவே இலங்கை இந்த முயற்சியை செய்துள்ளது.
தாம் கொடுக்க முன்வந்துள்ள வானூர்திகளை ஐநா ஏற்றுக்கொள்வதாக இதுவரை அறிவிக்கவில்லையென இலங்கை விமானப்படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் அன்ரூவ் விஜேசூரிய பிபிசிக்குத் தெரிவித்தார்.
ஐநாவின் அமைதிகாக்கும் படைகளில் ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கைப்படையினர் தற்போது பணியாற்றுகிறார்கள்.
இதேவேளை சில ஆண்டுகளுக்கு முன்னர், ஐநா படையிலிருந்த இலங்கைப் படையினர் ஹெய்ட்டியில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’