வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 7 ஜூன், 2011

சமச்சீர் கல்வி ரத்து- சட்டம்

மிழகத்தில் திமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்விமுறையை ரத்து செய்யும் தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்வி முறை (திருத்தச்) சட்டம் இன்று தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

மாநிலத்தில் அரசுப் பள்ளிகள் அரசு வகுக்கும் பாடத்திட்டத்தினையும், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் பள்ளிகள் தமக்கு விருப்பமான பாடத்திட்டங்களையும் அமல்படுத்திவருகின்றன.
இப்படிச் செய்வதால் கல்வித்தரம் பள்ளிக்குப் பள்ளி வேறுபடுகிறது என்று கூறி அனைத்துப் பள்ளிகளும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தினையே பின் பற்றவேண்டும் என்ற நோக்கில் கடந்த திமுக அரசால் சமச்சீர் கல்வித்திட்டம் உருவாக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பிற்கு ஒரே மாதிரியான பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2011-12லிருந்து ஒன்றிலிருந்து பத்துவரை அனைத்து வகைப்பள்ளிகளிலும் ஒரே பாடத்திட்டம் என்று முடிவு செய்யப்பட்டு, புத்தகங்களெல்லாம் அச்சடிக்கப்பட்டு, பள்ளிகள் திறக்கப்படவிருக்கும் நிலையில், புதிய முதல்வர் ஜெயல்லிதா சமச்சீர் திட்டம் கைவிடப்படும் என ஏற்கெனவே அறிவித்திருக்கிறார்.
அவ்வறிவிப்பை சட்டமாக்கும் மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்ட்து. பள்ளிக்கல்வி அமைச்சர் சிவி ஷண்முகம் திமுக அரசின் சட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும், எனவே விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கணக்கு, அறிவியல், ஆங்கிலம் போன்றவற்றில் தகுதிக் குறைவான பாடத்திட்டம் காணப்படுவதாகவும், தவிரவும் அகில இந்திய தேர்வுகளை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ள புதிய பாடத்திட்டம் போதாது என்றும் கூறினார்.
மேலும் அ இ அ.தி. மு.க. அரசு சமச்சீர் கல்விக்கு எதிரி அல்ல, அதில் உள்ள தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் என்றுதான் அன்றும் சொன்னோம், இன்றும் சொல்கிறோம் என்றார் அவர்
முதல்வர் ஜெயலலிதாவும் முழுமையான ஆய்விற்குப் பிறகு சமச்சீர் கல்வித் திட்டத்தை கொண்டு வருவதுதான் தனது அரசின் எண்ணம் என்றும் வலியுறுத்தினார்.

மேலவையும் போனது

சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். திமுக அரசில் பள்ளிக் கல்வி அமைச்சராயிருந்த தங்கம் தென்னரசு பல கல்வியாளர்களைக் கலந்தாலோசித்தே புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டதாகக் கூறினார்.
திமுக அரசின் முன்முயற்சியில் மறைந்த எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் ரத்து செய்யப்பட்ட சட்ட மேலவையை மறுபடி உருவாக்கும் மத்திய சட்டம் திரும்பப்பெறவேண்டும் எனக்கோரும் தீர்மானமும் இன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்தியாவில் 5 மாநிலங்களில்தான் மேலவை இருப்பதாகவும், அதனால் வீண் செலவுதான் என்றும், திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினர் மற்றும் அவருக்கு துதி பாடுகிறவர்களுக்கு பதவிகள் வழங்கவே சட்டமன்ற மேலவையை தி.மு.க. கொண்டு வந்ததாகவும் முதல்வர் ஜெயல்லிதா குற்றஞ்சாட்டினார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’