வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 7 ஜூன், 2011

கமலினியை ஜூலை 4 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

மிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான கமலினி எனும் சுப்ரமணியம் சிவகாமியை ஜூலை 4 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் ரஷ்மி சிங்கப்புலி இன்று உத்தரவிட்டார்.

கமலினி, வவுனியாவில் கைதுசெய்யப்படும்போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவராக செயற்பட்டதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதவானிடம் தெரிவித்தனர். கமலினியை மேலும் விளக்கமறியலில் வைத்து விசாரிப்பதற்கு அவர்கள் அனுமதி கோரினர்.
11.11.1993 ஆம் திகதி பூநகரி இராணுவ முகாம் மீதான தாக்குதலில் கமலினி பங்குபற்றியதாகவும் 2003 ஆம் ஆண்டு மே மாதம், பெண்களுக்கான கூட்டங்களை நடத்துவதற்காக அவர் சுவிட்ஸர்லாந்து, நோர்வே ஆகிய நாடுகளுக்குச் சென்றதாகவும் குற்றப் புலனாய்வுப்பிரிவினர் தெரிவித்தனர்.
கிளிநொச்சியில் அவர்அலுவலகமொன்றைக் கொண்டிருந்ததாகவும் அவருக்கு வாகனமொன்று வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் ஜூலை 4 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’