வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 7 ஜூன், 2011

ஆஸியிலிருந்து நாடு கடத்தப்படும் நிலைமையை எதிர்நோக்கும் மதகுரு

இலங்கையைச் சேர்ந்த முன்னாள் இந்து மதகுரு ஒருவர் ஒழுக்கமற்ற நடத்தையைக் கொண்டிருந்தார் என குற்றம் காணப்பட்டு அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

'பிரேமகாந்தன் இராஜரட்ன சர்மா என்பவர் அவுஸ்திரேலியாவின் கறும் டவுன்ஸ் என்னும் இடத்தில் அமைந்திருந்த ஸ்ரீ சிவா விஷ்ணு கோவிலின் குருவாக இருந்த சமயம் கடந்த ஜுலை மாதம் 12ஆம் திகதி 2004ஆம் ஆண்டு 23 வயதுடைய ஒரு பெண் இவரிடம் உதவி கோரி வந்தார்.

தனக்கு ஏதோ ஆபத்து நேரவுள்ளது என மனக்கிலேசமடைந்திருந்த இந்தப் பெண் இந்த கோவிலில் வணங்கிவிட்டு குருவின் ஆசீர்வாதத்தை பெறும் எண்ணத்தோடு வந்திருந்தார். கோவிலின் குரு இந்தப் பெண்ணை கோவில் வளவிலிருந்து தனது வீட்டுக்கு அழைத்துள்ளார் என பிராங்ஸ்ரான் நீதவான் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
பெண்ணின் சாதகத்தை பார்த்து பலன் கூறிய பூசகர் இந்த பெண்ணை வீட்டின் உட்பகுதிக்கு அழைத்துச்சென்று வீபூதி தடவி அவரை ஆசீர்வதிக்கத் தொடங்கினார்.
2009 ஏப்ரலில் இன்னொரு பெண் இந்த கோவில் பூசகர் தனக்கும் இவ்வாறு செய்ததாக முறையிட்டது பற்றியும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
'இவர் மீது இப்படியான குற்றங்கள் கூறப்பட்ட பின் அவர் தன் வேலையையும் வீட்டையும் இழந்துவிட்டார். இவருக்கு இப்போது அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு நிரந்தர வதிவிட அனுமதியும் கிடைத்துள்ளது. இப்போது இந்த சலுகைகள் மீளப் பெறப்பட்டு இவர் நாடு கடத்தப்படக் கூடும்' என இவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கூறினார்.
இந்த நிகழ்வு இவரது குடும்பத்தாரையும் பாதித்துள்ளது என அவர் கூறினார். ராஜரட்ன சர்மாவின் நடத்தை நம்பிக்கைத் துரோகமானது என நீதிபதி தெரிவித்தார்.
சர்மாவின் உடல் நிலையையும் இரக்கம் காட்டுமாறு கேட்டதையும் கருத்தில் கொண்டு நீதவான் இவருக்கு இரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனை விதித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’