வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 6 ஜூன், 2011

புலம்பெயர் தமிழருக்கு ஜனாதிபதி சவால்

லங்கை தமிழ் மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்ட புலம்பெயர் தமிழர்கள் இருப்பார்களாயின் ஒரு டொலரையேனும் அவர்களுக்கான அன்பளிப்பாக வழங்கட்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்.

கொக்காவில் தொலைத்தொடர்பு கோபுர சேவையை ஆரம்பித்து வைத்து உரையாடிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறான சவாலை விடுத்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என வெளிநாடுகளில் இருந்தவாறு கூச்சலிடும் புலம்பெயர் தமிழர்களில் ஒருவரேனும் தமிழ் மக்களின் நலனுக்காக ஒரு டொலரை கூட அன்பளிப்பு செய்ததில்லை.
அவர்களுக்கு கொழும்பு, கிளிநொச்சி, யாழ்ப்பாணத்தில் எல்லாம் வீடுகள் உண்டு. ஐரோப்பா, கனடா, அமெரிக்காவிலும் கூட வீடுகள் உண்டு. அவர்கள் ஆங்கிலம் பேசி தமக்கான நிதிகளைச் சேகரித்துக்கொள்கின்றனர்.
இவர்களில் பலர் தமிழில் பேசுவதில்லை. எனக்கு தெரிந்த தமிழ் கூட அவர்களில் பலருக்கு தெரியாது. ஆனால் அவர்கள் தங்களுக்கான நிதி சேகரிப்பதில் மிகவும் திறமைசாலிகள்.
எவ்வாறெனினும் புலம்பெயர்ந்த தமிழர்களால் சேகரிக்கப்படும் நிதிகள் இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு உதவ பயன்படுத்தப்படுவதில்லை.
ஆனால் தமிழர்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கும் இடையில் பிரிவினையை ஏற்படுத்தக்கூடிய பிழையான தகவல்களையும் பொய்யையும் பரப்பவே அந்த நிதியைப் பயன்படுத்துகின்றனர். இதன்மூலம் மறைந்து போன தமது ஈழக் கோரிக்கையை மீண்டும் தோண்டியெடுக்க முயற்சி செய்கின்றனர்.
ஆனால் இலங்கைத் தமிழ் மக்கள் இவர்களின் கபட நடவடிக்கைகளை விளங்கிக்கொள்ளும் அளவுக்கு விவேகம் உள்ளவர்களாக காணப்படுகின்றனர்' என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’