வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 6 ஜூன், 2011

ராம்தேவ் சொத்து குறித்து வருமான வரித்துறை, அமலாக்கத் துறை விசாரணை

பா பா ராம்தேவின் சொத்துக்கள் குறித்து விசாரணை செய்ய வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத் துறையை ஏவி விட்டுள்ளது மத்திய அரசு.


ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதத்தில் குதித்த பாபா ராம்தேவை மத்திய அரசு டெல்லி காவல்துறையை ஏவி விட்டு வெளியேற்றி வன்முறையை அரங்கேற்றிய செயல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சலசலசப்பு அடங்குவதற்குள் தற்போது ராம்தேவ் மீது அடுத்த பாணத்தை ஏவியுள்ளது மத்திய அரசு.
இத்தனை காலமாக ராம்தேவின் சொத்துக்கள் குறித்து கண்டு கொள்ளாமல் தூங்கிக் கொண்டிருந்த வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் இப்போது திடீரென விழித்தெழுந்து ராம்தேவின் சொத்துத்கள் குறித்து விசாரிக்கப் போகின்றனவாம்.
ராம்தேவின் நிறுவனங்கள், சொத்துக்கள் குறித்து முழுமையாக விசாரிக்குமாறு இந்த துறைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ராம்தேவ் மற்றும் அவரது உதவியாளர்கள் தொடர்புடைய 200 நிறுவனங்களை தோண்டி ஆய்வு நடத்த இரு துறைகளும் தயாராகி வருகின்றனவாம். அதில் முக்கியமானது பதஞ்சலி ஆயுர்வேத லிமிட்டெட் மற்றும் ஆரோக்கியா ஹெர்ப்ஸ் ஆகிய இரு அமைப்புகள் முக்கியமானவை.
மேலும் ராம்தேவின் நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலங்கள், அவற்றை வாங்கிய விதம், சொத்துக்கள் உள்ளிட்டவை குறித்தும் விசாரிக்கப்படவுள்ளதாம்.
இந்த 200 நிறுவனங்களில் 34 நிறுவனங்களில் ராம்தேவின் நெருங்கிய உதவியாளரான ஆச்சார்யா பால்கிருஷ்ணா இயக்குநராக இருக்கிறார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’