யு த்தத்திற்கு பின் கிளிநொச்சி மாவட்டம் பல்வேறு வகைகளில் துரித அபிவிருத்தி கண்டு வருகிறது. அரசு இதற்கான பல கோடிக் கணக்கான ரூபாய்களை செலவு செய்து மாவட்டத்தையும் மக்களின் வாழ்கையையும் உன்னத நிலைக்கு கொண்டு வருவதற்காக செயற்பட்டு வருகிறது. எனவே தான் இந்த நல்ல மாற்றங்களை மேலும் அதிகரித்து இம்மாவட்டத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்க அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன
இன்று (21) கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் அலுவலகத்தில் இடம்பெற்ற விவசாயிகளுக்கான நீர் இறைக்கும் இயந்திரம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றத்தின் பின்னர் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. மக்கள் முதன்முதலாக இங்கு குடியேறிய காலப் பகுதியினையும் இன்றுள்ள நிலைப்பாட்டினையும் ஒப்பிட்டு நோக்கினால் அதன் பெறுபேற்றை வெளிப்படையாக காணமுடியும். இங்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் நடைபெற்றுள்ளன பலதிட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அத்தோடு மக்கள் வாழ்வாதாரத்தில் குறிப்பிடக்கூடிய அளவுக்கு வளர்ச்சி கட்டங்களை எட்டியுள்ளனர். இருப்பினும் நலிவுற்ற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நாம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் மக்களை மீண்டும் ஒரு இருண்ட காலத்திற்குள் தள்ள சில சக்திகள் முற்பட்டு வருகின்றன. அவ்வாறான சக்திகளால் எமது மக்களின் வாழ்வில் நிச்சயம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி கொடுக்க முடியாது எனவும் இம் மாவட்டத்தின் தற்போது அனைத்து துறைகளிலும் பரந்துபட்ட அபிவிருத்தி பணிகள் இடம்பெற்று வருகின்றது. இது இம்மாவட்டத்தில் இயல்பு நிலைமை தோற்றுவித்துள்ளமையை எடுத்துகாட்டுகிறது எனவும் சந்திரகுமார் அவர்கள் தெரிவித்தார்
மேலும் கடந்த இந்த கொடிய யுத்தத்தால் எமது மக்கள் பெரும் பாதிப்புக்களை சந்தித்துள்ளனர் பலர் கொல்லப்பட்டுள்ளனர் பலர் காணாமற் போயுள்ளனர் இன்னும் பலர் புனர்வாழ்வு முகாம்களில் உள்ளனர். எனவே இந்த கொடிய விளைவுகளை மக்கள் புரிந்துகொண்டு எமது எதிர்கால சந்ததியினரை மீண்டுமொரு முறை யுத்த சூழ்நிலைக்குள் தள்ளி விடாமல் அபிவிருத்தியையும் அரசியல் உரிமைகளையும் சமகாலத்தில் பெற்று அதனை நல்ல சூழலில் அனுபவிக்கும் வகையில் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
சிறுவர் நிதிய திட்ட இணைப்பாளர் ஜெயதீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாள்குளம் புதுமுறிப்பு கனகபுரம் ஜெயந்திநகர் கிஸ்ணபுரம் சிவநகர் திருநகர் தெற்கு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 104 விவசாயிகளுக்கு நீர் இறைக்கும் இயந்திரங்களும் அதற்குரிய உபகரணங்களும் வழங்கப்பட்டன. ஒவ்வொன்றும் தலா 35000 ரூபா பெறுமதியிலான இத்தொகுதிகள் இது வரைக்கும் 414 விவசாயிகளுக்கு 144 இலட்சம் ரூபா செலவில் கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் சிறுவர் நிதிய நிறுவனத்தினரால் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கரைச்சி பிரதேச செயலர் நாகேஸ்வரன் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் அமல்ராஜ் விவசாய போதானாசிரியர் சுதர்சினி கிராம அலுவலர்கள் விவசாயிகள் அகியோர் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’