வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 25 ஜூன், 2011

தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு கலைக்கப்பட்டது

மிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்துடன் (டெலோ) இணைந்து கொள்வதற்காக தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பை இன்றுடன் கலைப்பதாக அதன் தலைவர் சட்டத்தரணி என் . ஸ்ரீகாந்தாவும் செயலாளர் எம்.கே. சிவாஜலிங்கமும் அறிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள ஸ்ரீகாந்தாவின் இல்லத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் அவர்கள் இத்தீர்மானத்தை அறிவித்தனர்.
தமிழ் தேசிய சக்திகள் ஒன்றினைய வேண்டிய தருணம் வந்திருக்கிறது. இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலமான ஒரு கட்சியாக தோற்றுவிப்பதற்காகவும், தமிழ் இனம் மீண்டும் தலை நிமிந்து வாழவேண்டும்' என்பதற்காக தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பை இன்றுடன் கலைக்கின்றோம்' என சட்டத்தரணி என். ஸ்ரீகாந்தா அறிவித்தார்.
புலம்பெயர் தமிழர்களும் டெலோவின் உயர் பீடத்துடனும் நடத்திய ஆழமான கலந்தாலோசனைக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவுகளின் பிரகாரம் தமது தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பை கலைத்து நாளை ஞயிற்றுக்கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ள டெலோ இயக்கத்தின் வருடாந்த மாநாட்டில் இணைய இருப்பதாகவும் தெரிவித்தார்.
டெலோ இயக்கத்தின் பிரித்தானியா, லண்டன் சுவிட்ஸர்லாந்து மற்றும் பிரான்ஸ் கிளைகளைச் சேர்ந்த டெலோ இயக்க அங்கத்தவர்களின் வேண்டுகோள்களுக்கு மதிப்பளிக்கும் முகமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
டெலோ இயக்கத்தின் அரசியல் தலைவராக சிவாஜிலிங்கத்தை தெரிவுசெய்ய வவுனியா வருடாந்த மாநாட்டில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நாளை டெலோ மாநாடு

இதேவேளை வருடாந்த தேசிய மகாநாடு நாளை ஞாயிறு வவுனியாவில் நடைபெறும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

டெலோவிலிருந்து பிரிந்து சென்று புதிய கட்சி ஒன்றினை ஏற்படுத்திய சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினர் தமது கட்சியினை கலைத்துவிட்டு மீண்டும் டெலோவுடன் இணைந்துகொள்ளவுள்ளதாகவும் வினோநோகராதலிங்கம் எம்.பி. மேலும் தெரிவித்தார்.
இம்மாநாட்டில் கட்சியின் புதிய நிர்வாகம், முக்கிய அரசியல் தீர்மானங்கள் இங்கு எடுக்கப்படவுள்ளன எனவும் அவர் கூறினார்.
மாவட்ட ரீதியில் பொதுக் குழுவின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட 49 பிரதிநிதிகள் தேசிய மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’