த மிழ் மக்களின் அபிலாஷைகளுக்கான தீர்வில் 13 ஆவது திருத்தச் சட்டம் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமா இல்லையா என்பதை நாடாளுமன்றத் தெரிவுக் குழுவே தீர்மானிக்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஐ.தே.க. பிரதித் தலைவர் கரு ஜயசூரியவுடனான சந்திப்பொன்றின்போது ஜனாதிபதி மஹிந்த இதைத் தெரிவித்துள்ளார்.
அனைத்து அரசியல் கட்சிகளினால் அங்கீகரிக்கப்பட்ட தீர்வுத்திட்டமொன்றை நாடாளுமன்றம் முன்வைக்க வேண்டுமென அசராங்கம் விரும்புவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
கந்தானையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இலங்கை அமரபுர நிக்காயாவின் வைபவமொன்றில் இவ்விருவரும் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து நேற்றுமுன்தினம் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் செயற்பாடுகளில் பங்குபற்றுமாறு ஐதேகவுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்ததாகவும் ரணில் விக்கிரமசிங்கவிடம் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இது குறித்து ஐ.தே.க. செயற்குழு தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் மக்களின் எந்வொரு அபிலாஷைகளுக்குமான தீர்வு, அனைத்துக் கட்சிகளும் அங்கம் வகிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக் குழு மூலமே தீர்மானிக்கப்படும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என இந்தியாவுக்கு தான் அறிவித்துவிட்டதாக கரு ஜயசூரியவிடம் ஜனாதிபதி கூறினார் எனத் தெரியவருகிறது. (சண்டே டைம்ஸ்)

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’