வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 26 ஜூன், 2011

ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக அமெரிக்கா குற்றப்பத்திரம் தயாரித்தது: பஷில்

லங்கைக்கு எதிராக சில உள்ளூர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்ச்சியாக சதி செய்து வருவதாக கூறியுள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை ஒன்றையும் தயாரித்திருந்ததாக கூறியுள்ளார்.

எம்பிலிபிட்டியவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கையில் தமிழ் புலிகள் ஒழிக்கப்பட்டாலும் தப்பிச் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் சிலர், வெளிநாட்டுச் சக்திகள் சிலவற்றின் உதவியுடன் நாட்டை சீர்குலைக்க ஒன்றுதிரண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
' சில அரச சார்பற்ற நிறுவன்களும் அவர்களுடன் இணைந்திருக்கின்றன. அச்சக்திகள் அடுத்தடுத்து சதிகளை மேற்கொண்டு வருகின்றன.தருஸ்மன் அறிக்கையின் பின்னர் ஒரு தடவை ராஜபக்ஷ குடும்பத்தை குறிப்பிட்டுக் காட்டி அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் குற்றப்பத்திரமொன்றையும் தயாரித்தது' என அவர் கூறினார்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டிற்கு துரோகமிழைத்ததாகவும் ரணில்- பிரபா ஒப்பந்தம் என்ற பெயரில் பிரபலமான ஒப்பந்தமொன்றின் மூலம் 8 மாவட்டங்களை எல்.ரி.ரி.ஈயினருக்கு கொடுத்ததாகவும் பஷில் ராஜபக்ஷ கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’