இ லங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு,(SLTRC) கடந்த ஜூன் 20 ஆம் திகதி குறிப்பிட்ட சில சுயாதீன செய்தி இணையத்தளங்கள் தடுக்கப்பட்டதற்கும் தனக்கும் தொடர்பில்லை என இன்று கூறியது.
கடந்த வருடம் நீதிமன்ற கட்டளைக்கமைய லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தை தடுத்தோம். இதைவிட வேறு எந்த வலையமைப்பையும் நாம் தடுக்கவில்லை. லங்கா ஈ நியூஸ் மீதான தடையும் நீதிமன்றின் கட்டளைப்படி தற்போது நீக்கப்பட்டுவிட்டது. இப்போது அதை யாரும் பார்வையிடலாம் என டி.ஆர்.சி இன் பணிபாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட டெய்லிமிரர் இணையத்தளத்துக்கு கூறினார்.
ட்ரான்ஸ்பரன்ஸி இன்ரநெஷனல் உட்பட பல சுயாதீன செய்தி இணையத்தளங்கள் ஜூன் 20 ஆம் திகதி திறக்க முடியாது இருந்ததை பற்றி ஊடகவியலாளர்களின் சர்வதேச சம்மேளனம் தனது கவலையை வெளியிட்டிருந்தது.
எவ்வாறெனினும் இணையத்தளங்களை இப்போது பார்வையிட முடிகின்றது. இவற்றை பார்க்கமுடியாமல் இருந்தமைக்கான காரணம் தெரியவில்லை.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’