வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 23 ஜூன், 2011

நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் கொடுமைப்படுத்தப்பட்டமைக்கு ஆதாரமில்லை: பிரிட்டன்

அரசியல் அடைக்கலம் கோரும் தமிழர்கள் யாவருக்கும் சர்வதேச பாதுகாப்பு தேவையென தான் கருதவில்லையென்றும் முன்னர் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்ட, அரசியல் தஞ்சம் கோரியவர்கள் இலங்கை அதிகாரிகளால் கொடுமைப்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லையெனவும் பிரித்தானிய குடிவரவு அமைச்சர் டேமியன் கிறீன் தெரிவித்துள்ளார்.

திருப்பியனுப்பப்படுவோர் துன்புறுத்தப்படாமல் இருப்பதை நிச்சயப்படுத்துவதற்கு உறுதியான வழி நாம் அவ்வாறான ஆபத்துள்ளவர்களை திருப்பியனுப்பாமல் விடுவதேயாகுமென அவர் கூறினார்.
ஐக்கிய இராச்சியத்தின் எல்லை முகவரமைப்பு, அரசியல் தஞ்சக் கோரிக்கைகள் யாவற்றையும் கவனமாக பரசீலிக்கின்றது. ஒரு விண்ணப்பதாரி தனக்கு சர்வதேச பாதுகாப்பு தேவையென நிரூபிக்குமிடத்து தஞ்சம் வழங்கப்படுகிறது. இவ்வாறு தான் நாம் அரசியல் தஞ்சம் உண்மையில் தேவையானவருக்கு பாதுகாப்பு வழங்குகின்றோமென பிரித்தானிய குடிவரவு அமைச்சர் குறிப்பிட்டார்.
முன்னர் ஒருவருக்கு, அவரது நாட்டில் ஆபத்து காணப்பட்டது என்பதற்காக அரசியல் தஞ்சம் வழங்கப்படுவதில்லை. அவருக்கு இப்போது ஆபத்துள்ளதா என்பதை பொறுத்தே தஞ்சம் வழங்கப்படுமென அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’