வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 16 ஜூன், 2011

த.தே.கூட்டமைப்பு வேட்பாளர் அறிமுகக்கூட்டத்தில் இராணுவத்தினர் புகுந்து தாக்கியதாக புகார்

லி வடக்கு பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை அறிமுக விழா அளவெட்டி மகாஜனக் கல்லூரியில் இன்று மாலை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, அங்கு புகுந்த இராணுவத்தினர் கூட்டத்தை நடத்தவிடாமல் தடுத்தாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெல்லிப்பழை பொலிஸில் புகாரிட்டுள்ளது.


இது தொடர்பாக மாவை சேனாதிராஜா எம்.பி. கூறுகையில்

"தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான நான், சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுரேந்திரன், ஈ.சரவணபவன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, கே. சிறிதரன் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டம் அளவெட்டி மகாஜனக் கல்லூரியில நடைபெற்றுகொண்டிருந்தபோது நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் புகுந்து கூட்டம் நடத்தமுடியாது எனக் கூறி அங்கிருந்தவரக்ளை தாக்கினர்.
அப்போது எமது மெய்க்காவலர்களான பொலிஸார் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டபோது அவர்களும் தாக்கப்பட்டனர்.
இதனால் பலர் கயாமடைந்தனர். சரவணபவன் எம்.பி. உரையாற்றிக்கொண்டிருந்த ஒலிவாங்கியும் வீசி எறியப்பட்டது. இது தொடர்பாக நாம் தெல்லிப்பளை பொலிஸ்நிலையத்தில் புகாரிட்டுள்ளோம். பாதுகாப்புப் படைகளின் யாழ் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவிடமும் நான் புகாரிட்டுள்ளேன்" என்றார்.

ஆனால் பாதுகாப்புப் படைகளின் யாழ் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க இக்குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.
இது தொடர்பாக மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க கூறுகையில், "இராணுவத்தினர் வழமைபோல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, கூட்டமொன்றை நடப்பதை அவதானித்தனர.; என்ன நடைபெறுகிறது என அங்கிருந்தவர்களிடம் இராணுவத்தினர் விசாரித்தனர். தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது கூட்டம் நடத்த அனுமதி பெறப்பட்டுள்ளதாக என இராணுவத்தினர் விசாரித்தனர். அனுமதி இல்லை எனக் கூறப்பட்டது. எனவே அனுமதியில்லாமல் கூட்டம் நடத்தமுடியாது என இராணுவத்தினர் கூறினர். அப்போது எம்.பி.களின்மெய்ப்பாதுகாவலர்களான பொலிஸார் இருவர் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின் இராணுவத்தினர் அங்கிருந்து சென்றுவிட்டனர்'"என்றார்.
"இப்பகுதியில் எந்தக்கட்சியும்கூட்டம் நடத்துவதில் எமக்குப் பிரச்சினை எதுவுமில்லை. இப்பகுதியில் எல்லா இடங்களிலும் இராணுவத்தினர் உள்ளனர். எனவே இங்கு என்ன நடைபெறுகிறது என்பதை இராணுவம் அறிந்திருக்க வேண்டும்" எனவும் அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’