வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 16 ஜூன், 2011

அல் கயீடாவின் புதிய தலைவராக அல் ஸவாஹிரி நியமனம்

ல் கயீடா அமைப்பின் புதிய தலைவராக அய்மன் அல் ஸவாஹிரி நியமிக்கப்பட்டுள்ளதாக ஏ.எவ்.பி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
அல் கயீடா ஸ்தாபகத் தலைவரான ஒசாமா பின் லாடன் கடந்த மாதம் பாகிஸ்தானில் வைத்து அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து அல் ஸவாஹிரி புதிய தலைவராக பதவியேற்றுள்ளார்.

'ஷேக் டாக்டர் அய்மன் அல் ஸவாஹிரி இவ்வமைப்பின் அமீராக (தலைவர்) பொறுப்பேற்றுள்ளார் என அல் கயீடாவின் பொதுக்குழு இன்று வியாழக்கிழமை விடுத்துள்ள மின்னஞ்சல் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
60 வயதான ஸவாஹிரி எகிப்தை சேர்ந்த கண் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. அல் கயீடாவின் மூளை என இவர் வர்ணிக்கப்பட்டார். பின் லாடனைப் போன்றே இவரும் 2001 செப்டெம்பர் 11 ஆம் திகதிக்குப் பின் தலைமறைவானார்.
ஸவாஹிரியை கைது செய்ய உதவுபவர்களுக்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர் சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’