வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 30 ஜூன், 2011

அமைச்சரின் முயற்சியில் வாழைநார் சார்ந்த கைப்பணித்துறை ஆரம்பம்

வா ழை நன்றாக வளரக் கூடிய இம்மாவட்டத்தில் கழிவுப் பொருளாக அகற்றப்பட்டு வரும் வாழைத் தண்டு மற்றும் வாழை மட்டைகளிலிருந்து நார் எடுத்து அது சார்ந்த கைப்பணிப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான வழிகாட்டலை வழங்கியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு இந்த மாவட்ட மக்களும் இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் அதிகாரிகளான நாமும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள வேண்டுமென சபையின் பொது முகாமையாளர் திருமதி ஜெஸ்மின் மன்னப்பெரும தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
வாழைநார் சார்ந்த கைப்பணிப் பொருட்கள் தயாரிப்பு தொடர்பில் பயிற்சிகளை முடித்துக் கொண்டு 117 பயிற்சியாளர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் மாலை யாழ் மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பொது முகாமையாளர், இந்தியாவில் வாழைநார் சார்ந்த கைப்பணிப் பொருட்கள் தயாரிப்பானது உச்ச நிலையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை ஆராய்ந்து அறிந்து கொண்ட எமது அமைச்சர் அவர்கள் இலங்கையிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்திலும் இவ்வாறான உற்பத்திகளை ஊக்குவித்து சுயதொழில் முயற்சிகளுக்கு வழிவகுக்க முடியும் என தீர்மானித்தார்.

இதன் பிரகாரம் யு.என்.டி.பி. அனுசரணையுடன் இந்தத் திட்டத்தை முன்னெடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இந்திய தூதரகத்தின் உதவியுடன் இந்தியாவில் வாழைநார் சார்ந்த கைப்பணிப் பொருட்கள் தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்ற இரு பயிற்றுவிப்பாளர்களை இலங்கைக்கு இந்த பயிற்சிகளை வழங்க ஏற்பாடு செய்திருந்தார்.

இப்பயிற்சியின் மூலம் இத்துறை சார்ந்த சிறந்த தொழில் நுட்பத்தைப் பெற்றுக் கொண்டுள்ள பயிற்சியாளர்களுக்கு இயந்திராதிகளின் வசதிகளையும் வழங்கி மூலதன உதவிகளும் மேற்கொண்டு இவர்களை சிறந்த சுயதொழில் முயற்சியாளர்களாக மாற்றுவதற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தற்போது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

அத்துடன், ஜப்பானிய கூட்டுத் தாபனமொன்று வாழைநார் சார்ந்த கைப்பணிப் பொருட்களையும் வாழை நாரையும் கொள்வனவு செய்ய முன்வரவுள்ள நிலையில் இத்துறைசார்ந்த தொழில் முயற்சியாளர்களுக்கு சிறந்ததொரு வளமான எதிர்காலம் காத்திருக்கிறது என்பது உறுதியாகும் என்று தெரிவித்த அவர் இவ்வாறான சிறந்ததொரு வழியை உங்களுக்குக் காட்டித் தந்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு நீங்கள் நன்றி பாராட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் வாழைநார் சார்ந்த கைப்பணிப் பொருட்கள் உற்பத்தியை இம்மாவட்டத்தில் வளர்ப்பதற்கு தன்னாலான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதாக உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் திரு சிவஞானசோதி கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் உதவிப் பணிப்பாளர் திரு கெங்காதரன் சபையின் பொறியியலாளர்கள் அதிகாரிகள் அமைச்சின் மேலதிகச் செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

















0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’