த மிழகத்தில் முந்தைய திமுக அரசு கொண்டுவந்திருந்த திட்டங்களில் மேலும் ஒன்றை ரத்து செய்யும் விதமாக இலவச கலர் டிவி திட்டத்தை கைவிடுவது என ஜெயலலிதா தலைமையிலான புதிய அதிமுக அரசு அறிவித்துள்ளது.
இலவச கலர் டிவி திட்டத்தின் ஆறாவது சுற்றில் விநியோகிப்பதற்காக சுமார் 7 லட்சம் டிவி பெட்டிகளுக்கு தமிழக அரசு கொடுத்திருந்த ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.
ஆனால் இந்த ஆறாம் சுற்றில் விநியோகிப்பதற்காக ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட ஒரு லட்சத்துக்கும் அதிகமான டிவி பெட்டிகள், அனாதை ஆசிரமங்கள், அங்கன்வாடிகள் போன்ற இடங்களுக்கு வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
முந்தைய திமுக அரசின் இலவச வீட்டுத் திட்டம், மருத்துவ காப்பீட்டுத் திட்டம் போன்றவற்றையும் ஜெயலலிதா அரசு ஏற்கனவே ரத்து செய்து மாற்றுத் திட்டங்களை அறிவித்துள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’