ஐ ரோப்பிய ஒன்றிய நாடுகளில் புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று புலிகள் சார்பாக விக்ரர் கொப்பே என்ற சட்டத்தரணி தாக்கல் செய்துள்ள வழக்கை ஐரோப்பிய நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்கவுள்ளதாக அந்த நீதிமன்றின் பதிவாளர் அறிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் சம்பவத்துக்குப் பிறகு விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தவில்லை என்றும் எதுவித வன்முறையும் அற்ற விதத்தில் தமது உரிமைகளுக்காகப் போராட விரும்புகிறார்கள் என்றும் விக்ரர் கொப்பே வாதாடுகிறார்.
இதனை ஏற்று வழக்கை விசாரிக்க ஐரோப்பிய நீதிமன்றம் இணங்கியுள்ளது. இது ஒரு மைல் கல்லாக நோக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம் ஆனது நீதிமன்று, பொது நீதிமன்று மற்றும் உரிமையியல் சேவை நீதிமன்று என்ற மூன்று நீதிமன்றங்களை உள்ளடக்கியது.
ஒவ்வொரு நீதிமன்றுக்கும் ஒரு நீதிபதியும் சட்டத்தரணியும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இங்கு சமர்ப்பிக்கப்படும் வழக்குகள் எழுத்து மூலமாகவும் வாய்மொழி மூலமாகவும் இரு நிலைகளில் விசாரிக்கப்படுகிறது.
ஐரோப்பிய நீதிமன்றமே ஐரோப்பிய அரசாங்கங்களுக்கும் ஐரோப்பிய நிறுவனங்களுக்கும் இடையிலான சட்ட முறுகல்களைத் தீர்த்து வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’