வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 23 மே, 2011

விக்கிலீக்ஸில் தயாநிதி மாறன்

லங்கைப் பிரச்சினையில் இந்தியா தலையிட்டு போரை நிறுத்தாவிட்டால், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவிவிலகவேண்டும் என்று 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திமுக நிறைவேற்றிய தீர்மானம் ஒரு அரசியல் நாடகம் என தயாநிதி மாறன் கூறியதாக விக்கிலீக்ஸ் தெரிவிக்கிறது.
நவம்பர் 2008ல் அமெரிக்க தூதரக அதிகாரியான கான்சல் ஜெனரல் ஆண்ட்ரூ சிம்கின்னை சந்தித்துப் பேசியபோது திமுக தலைவர் கருணாநிதியின் மருமகன் மறைந்த முரசொலிமாறனின் மகனும் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் இவ்வாறு கூறியதாக விக்கிலீக்ஸ் விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்து நாளேட்டில் வெளியான கட்டுரை ஒன்று, நவம்பர் 2008ல் கான்சல் ஜென்ரல் ஆண்ட்ரூ சிம்கின்னை தயாநிதி மாறன் சந்தித்துப் பேசியது பற்றிய விக்கிலீக்ஸ் விவரங்களை வெளியிட்டிருக்கிறது.

அச்சந்திப்பில் அன்றைய முதல்வர் கருணாநிதியின் தலைமையில் அக்டோபர் 14 அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட எம்.பிக்கள் பதவி விலகுவதாக எச்சரிக்கும் தீர்மானமே, மாநிலத்தில் எழுந்திருந்த கடும் மின்சாரப் பற்றாக் குறையினால் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த அதிருப்தியை திசைதிருப்ப நிகழ்த்தப்பட்ட ஒரு நாடகம்தான், ஆனால் மத்திய அரசை மிரட்ட அவ்வாறு முயன்றது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எரிச்சலை ஏற்படுத்தியது என்று தயாநிதி மாறன் கூறியதாக சிமிகின்னின் கேபிள் தெரிவிக்கிறது.

அனைத்துக் கட்சித் தீர்மானம் அக்டோபர் 28க்குள் இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் எனக்கோரியிருந்தது. ஆனால் அக்டோபர் 26 அன்று சென்னை வந்து கருணாநிதியை அன்றைய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சந்தித்து ஒரு சில முன்முயற்சிகளை மத்திய அரசு எடுக்கும் என்று உறுதியளித்தவுடன் கருணாநிதி பதவி விலகல் முடிவை ஒத்திவைப்பதாக அறிவித்தார். 40 ஆண்டுகாலப் பிரச்சினையை 4 நாட்களில் தீர்த்துவிடமுடியாது என்றும் கருணாநிதி கூறினாரெனவும் சிம்கின்னின் கேபிள் குறிப்பிடுகிறது.

ஆனாலும்கூட அனைத்துக் கட்சி தீர்மானத்தால் எழுந்த கோபத்தின் விளைவாய்தான் சோனியா காந்தி கருணாநிதியின் மகள் கனிமொழியை அப்போது சந்திக்க மறுத்துவிட்டார் என்றும் மாறன் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தக்க தருணத்தில் காங்கிரஸ் திமுகவிற்கு பதிலடிகொடுக்க்க்கூடும் என்று மாறன் அஞ்சியதாகவும் அக்கேபிள் தெரிவிக்கிறது.

தவிரவும் ராகுல் காந்தி உள்ளிட்ட சில காங்கிரஸ் தலைவர்கள் ராஜீவ் காந்தியைக் கொன்ற விடுதலைப்புலிகளுக்கு முடிவுகட்டவேண்டும் என்று நினைப்பதாகவும், அத்தகைய சிந்த்னை காங்கிரசிற்கும் திமுகவிற்குமிடையே மோதலை ஏற்படுத்தியதாகவும் மாறன் மேலும் விளக்கியிருந்ததாக அமெரிக்க அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’