வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 23 மே, 2011

ஊக்க மருந்து: 'சிந்தன விதானக சிக்கினார்'

லங்கையின் பளுதூக்கும் வீரர் சிந்தன விதானக ஊக்க மருந்து பயன்படுத்தினார் எனத் தெரியவந்துள்ளதாக சர்வதேச பளுதூக்கும் போட்டிகளின் சம்மேளனம் தெரிவித்துள்ளதாக இலங்கை அரசின் விளையாட்டு மருத்துவத்துறைக்கான தலைமை இயக்குநர் டாக்டர் கீதாஞ்சன மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் சீனாவில் இடம்பெற்ற ஆசிய பளுதூக்கும் போட்டியில் 69 கிலோ எடைப்பிரிவில் பங்கு பெற்ற சிந்தன விதானக அப்போட்டியில் பதக்கம் எதையும் வெல்லவில்லை.
எனினும் அதில் பங்கு பெற்ற அனைத்து வீரர்களிடம் வழக்கமாக நடத்தப்படும் ஊக்க மருந்து பரிசோதனையில் அவர் தேரவில்லை என பீஜிங் போட்டி அமைப்பினர் தமக்கு தெரிவித்துள்ளதாக டாக்டர் கீதாஞ்சன மெண்டிஸ் சந்தேஷ்யவிடம் தெரிவித்தார்.
பி சாம்பிள் எனப்படும் இரண்டாவது பரிசோதனைக்கு விதானக உட்படுவாரா என்பது குறித்த தகவல்கள் 24.5.11 அன்று தெரியவரும் என்றும் டாக்டர் மெண்டிஸ் கூறுகிறார்.
2006 ஆம் ஆண்டு மெல்பர்ணில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் சிந்தன விதானக தங்கப்பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வன்னியராச்சி ஓய்வு

இதனிடையே, கடந்த ஆண்டு புதுடில்லியில் இடம் பெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் பந்தயத்தில் குத்துச்சண்டை போட்டியில் 56 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று, பின்னர் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்து பதக்கம் இழந்த இலங்கையின் மஞ்சு வன்னியாராய்ச்சி குத்துச் சண்டை போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அவரது பயிற்சியாளர் இலங்கை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’