வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 13 மே, 2011

ராஜபக்ஷவை கூண்டில் நிறுத்த வேண்டும்: ஜெ.

லங்கையில் நடைபெற்றுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படும் போர்க் குற்றங்களுக்காக அதிபர் ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்த இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள அதிமுக தலைவி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழ் மக்களுக்கு கௌரவமான, கண்ணியமான வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க இலங்கை அரசு தவறினால், மற்ற நாடுகளின் ஒத்துழைப்புடன் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவர இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தேர்தல் முடிவுகள் வெளியாகி, அதிமுக கூட்டணி பெரு வெற்றி பெற்றுள்ள நிலையில், ஜெயா டிவிக்கு அளித்துள்ள செவ்வியிலேயே ஜெயலலிதா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர்கள் அனுபவித்துள்ள சொல்லொணாத் துயரங்களுக்கு இலங்கை அரசே காரணம் என்றும், இலங்கை வாழ் தமிழர்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பது, தமிழர்கள் என்ற வகையில் தமது கடமை எனவும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை சர்வதேச பிரச்சனை என்பதால் மத்திய அரசே நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும், தான் தமிழக முதல்வராக பதவியேற்ற பின்னர் இந்த விடயம் தொடர்பில் மத்திய அரசை வலியுறுத்தவுள்ளதாகவும் அதிமுக தலைவி ஜெயா டிவிக்கு அளித்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’