இ லங்கையில் அனைத்து இன மக்களும் சம உரிமையுடனும் சம வாய்ப்புக்களுடன் ஒற்றுமையாகவும் சந்தோசமாகவும் வாழக்கூடிய சமாதானத்தையும் அமைதியையும் உருவாக்குவீர்கள் என நம்புகிறேன் என்று தெரிவித்து தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வீ. ஆனந்தசங்கரி அ.தி.மு.க. செயலாளர் செல்வி ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தாங்கள் தங்கள் கட்சியாகிய அ.தி.மு.கா.வை நடந்தேறிய சட்டமன்ற தேர்தலில் 87 வீதமான ஆசனங்களை பெற்று முன்பு என்றும் இல்லாதது போல் பெருவெற்றி ஈட்டி தமிழ் நாட்டின் முதல் அமைச்சராக உயர்ந்த வாய்ப்பு பெற்றமைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக பெருமையுடன் உங்களை வாழ்த்துகின்றேன்.
தமிழ் நாட்டின் 7 கோடி மக்களோடு இலங்கைத் தமிழர்களாகிய நாம் இந்த சரித்திர பிரசித்தி பெற்ற சாதனை தமிழ் நாட்டு மக்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் விடிவு காலத்தை ஏற்படுத்துமென மிக்க மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றோம். முரண்பாடின்றி நல்லுறவுடனும் தங்களின் விடாமுயற்சியாலும், இலங்கையில் அனைத்து இன மக்களும் சம உரிமையுடனும் சம வாய்ப்புக்களுடனும் ஒற்றுமையாகவும், சந்தோஷத்துடனும் வாழக்கூடிய சமாதானத்தையும் அமைதியையும் உருவாக்குவீர்கள் என நம்புகின்றேன்.
தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கும் இச்சந்தர்ப்பத்தில் எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’