க ம்பராமாயணத்தில் கைகேயி சூழ்வினைப் படலம் எனும் தொனிப் பொருளில் சுழலும் சொல்லாடு களம் இன்றைய தினம் யாழ் மத்திய கல்லூரி தம்பர் மண்டபத்தில் நடைபெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கம்பராமாயணத்தில் மந்தாரை சூழ்ச்சியால் பெரிதும் பாதிப்புக்குள்ளான பாத்திரம் எது? என்பது தொடர்பில் ஐவர் களமிறங்கி வாதாடினர்.
சரவணை நாகேஸ்வரி மகாவித்தியாலய ஆசிரியர் திரு கு.பாலசண்முகன் கைகேயியே என்றும் யாழ் மத்திய கல்லூரி ஆசிரியர் திரு. நாக தமிழிந்திரன் தசரதனே என்றும் யாழ் பல்கலைக்கழக கணக்கியற்துறை தலைவர் பேராசிரியர் வேல்நம்பி இராமனே என்றும் சொல்லின் செல்வர் இரா. செல்வவடிவேல் இலக்குவனே என்றும் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர் திரு. ல.லலீசன் பரதனே என்றும் வாதிட்டனர்.
நிகழ்வின் நோக்குநராக கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் கலந்து கொண்டிருந்தார்.
நடுவராக பேராசிரியர் அ.சண்முகதாஸ் கடமையாற்றினார்.
கம்பராமாயணத்தில் மந்தரை சூழ்ச்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் மேற்படி ஐவரும் என ஐந்து அறிஞர்களும் சிறப்பாக வாதாடினர்.
மந்தரை சூழ்ச்சியால் பாதிக்கப்பட்ட ஏனையர்வகள் ஒரு காலகட்டத்தின் பின்னர் அதிலிருந்து விடுபட்ட வாழ்க்கைக்குத் திரும்பினர் என்றும் ஆனால் கைகேயி மட்டுமே இறுதிவரை அதன் பாதிப்புக்கு பெரிதும் உள்ளாகியவர் என்றும் கூறி தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’