வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 16 மே, 2011

முதலமைச்சர் சந்திரகாந்தன் கண்டனம்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என்று அழைக்கப்படும் எட்வின் கிருஷ்ணானந்தராஜாவை பொலிஸார் கைது செய்தமையை கண்டிப்பதாக அக்கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
எந்தவித முன்னறிவித்தலுமின்றி கிருஷ்ணானந்தராஜாவை பொலிஸார் கைது செய்தமைக்கு எதிராக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட அவர் எங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்பது எனக்கு தெரியாது. ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு சமூக நீரோட்டத்திற்கு வந்த இவர் எந்தவிதமான தீய செயல்களிலும் ஈடுபடவில்லை. அவர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் தற்போது எமது கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
கொலை சம்பவமொன்று தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எட்வின் கிருஷ்ணானந்தராஜா இன்று திங்கட்கிழமை மாலை கொழும்பிலிருந்து சென்ற விசேட பொலிஸ் குழுவொன்றால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’