வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 5 மே, 2011

வளமான எதிர்காலத்தைப் பெற்றுத் தரக் கூடிய சிறந்த தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் - வன்னி ஆசிரியர்கள்

ழந்துபோன வாழ்விலிருந்து வளமான எதிர்காலத்தைப் பெற்றுத் தரக் கூடிய சிறந்த தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே என இடமாற்றம் இரத்துச் செய்யப்பட்ட வன்னி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன
கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் வவுனியா ஆகிய மாவட்டங்களில் கடமையாற்றிய ஆசிரியர்கள் இன்றைய தினம் (04) அமைச்சரின் யாழ். அலுவலகத்திற்கு வருகைதந்து கலந்துரையாடலில் ஈடுபட்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில் கடந்த கால யுத்தத்தால் நாம் விலை மதிக்க முடியாத உயிர்களையும் உடமைகளையும் இழந்ததுடன் வாழ்வையும் இழந்தோம்.

இந்நிலையில் இழந்து போன எமது வாழ்வை மீண்டும் வளமானதொரு எதிர்காலம் நோக்கி கொண்டு செல்லக் கூடிய சிறந்த தமிழ் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டுமே விளங்கி வருகின்றார்.

அத்துடன் இறுதி யுத்தத்தின் பின்னர் நலன்புரி நிலையங்களில் மக்கள் தங்கியிருந்த வேளையில் அங்கு வந்து அவர்களுடன் கலந்துரையாடியதுடன் மக்களை நலன்புரி நிலையங்களிலிருந்து வெளியே கொண்டு வருவதிலும் அமைச்சரின் பங்கும் பணியும் முக்கியமானது என்றும் இதன் போது அவர்கள் சுட்டிக்காட்டினர்.

கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் கடந்த காலங்களில் பணியாற்றிய ஆசிரியர் தமக்கு யாழ்.மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்து தருமாறு அந்தந்த வலயங்கள் ஊடாக கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் குறிப்பிட்ட கோரிக்கை இடைநிறுத்தப்பட்டதையடுத்து இவ்விடயம் தொடர்பாக ஆசிரியர்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் கல்வித் துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் நியாயமான நீதியான முறையிலும் சாதகமான முறையிலும் இறுதி முடிவெடுக்கப்படும் எனவும் உறுதிபடத் தெரிவித்தார்.

சமூகத்தின் முன்னோடிகளை வழிகாட்டிகளை வளர்த்தெடுக்கும் பாரிய பொறுப்பும் எதிர்கால வளமான சிறந்த கல்விமான்களையும் உருவாக்கக் கூடியவர்களையும் வளர்த்தெடுக்கின்ற பொறுப்பு ஆசிரியர்களையே சாரும் என்றும் கடந்தகால தவறான அரசியல் வழிநடத்தல்களினால் தான் மக்களுக்கு இப்பேற்பட்ட உயிர் உடமை இழப்புக்கள் ஏற்பட்டனவென்றும் அவற்றிலிருந்து மீட்டெடுக்க வேண்டிய விதமாக நாம் செயற்பட்டு வருகின்றோம் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உறுதிபடத் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் அமைச்சர் அவர்களுடன் ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) அவர்கள் உடனிருந்தார்.











0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’