வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 18 மே, 2011

பின்புறத்தில் பச்சை குத்திவிட்டதாக வைத்தியசாலை ஊழியர்கள் மீது நோயாளி புகார்

த்திரசிகிச்சைக்காக வைத்தியசாலையில் தங்கியிருந்தபோது தனது பின்புறத்தில் (பிருஷ்டத்தில்) வைத்தியசாலை ஊழியர்கள் பச்சைக்குத்திவிட்டதாக நோயாளியொருவர் புகாரிட்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது
.சீனாவின் தென்மேற்கு பிராந்தியத்திலுள்ள யுனான் மாகாணத்தை சேர்ந்த செங் ஷியான்ஹுய் (வயது 34) சிறுநீரக கற்களை அகற்றுவற்காக வைத்தியசாலையில் தங்கியிருந்தார். சத்திரசிகிச்சையின் பின்னர், தனது பிருஷ்டத்தில் சீன மொழியில் பச்சை குத்தப்பட்டிருப்பதை அறிந்து வைத்தியசாலையில் வெளியேற அவர் மறுத்தார்.

'கல் நோய்' எனும் அர்த்தத்தில் இந்த பச்சை குத்தப்பட்டுள்ளதாம்.

ஷியான்ஹுயை வைத்தியசாலையிலிருந்து வெளியேறுமாறு நிர்வாகம் பணித்தது. இதை அவர் ஏற்றுக்கொள்ளாததால் பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.

ஆனால், இவ்விடயத்தில் பொலிஸார் தலையிடுவதை ஷியான்ஹுய் வரவேற்றுள்ளார்.

'நான் வைத்தியசாலையிலிருந்து போகமாட்டேன். நான் அரை மணித்தியாலம் வெளியே சென்றால்கூட நான் வெளியில் சென்று பச்சைக் குத்திவிட்டு வந்ததாக வைத்தியாசாலை நிர்வாகம் கூறிவிடும்' என்று அவர் தெரிவித்துள்ளார்.

'சத்திரசிகிச்சையின் பின் எனது பின்புறத்தின் ஒருபகுதி மிகவும் வலிப்பதை உணர்ந்தேன். ஆனால் இது சத்திரசிகிச்சையினால் ஏற்பட்ட வலியென்றே நான் நினைத்தேன்.
எனக்கு பச்சை குத்தப்பட்டிருக்கிறது என்பதை எனது மனைவியின் மூலமாகவே அறிந்துக்கொண்டேன். சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ஒரு வாரத்திற்கு பின்பு எனது மனைவி ஹு ஜோன் என்னை குளிப்பாட்டியபோதே இதை நான் அறிந்துகொண்டேன்.
எனது நண்பரின் சிபாரிசின் காரணமாகவே நாம் இந்த வைத்தியசாலையை தெரிவு செய்தோம். ஆனால் இவ்வாறான சம்பவம் நிகழுமென்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை' என்கிறார் அவர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’