வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 4 மே, 2011

சங்கானை கைத்தறி நெசவாலையை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆராய்வு!

ங்கானையில் கடந்த பல ஆண்டுகளாக செயலிழந்து போயுள்ள கைத்தறி நெசவாலைப் பகுதிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விஜயம் மேற்கொண்டு அங்கு கைத்தறி நெசவாலையை ஆரம்பிப்பது குறித்து ஆராய்ந்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன
கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக செயலிழந்து போயுள்ள சங்கானை மின்தறி நெசவாலையில் கைத்தறிகள் உற்பத்திப் பயிற்சி மற்றும் சேலைகளுக்கான சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய வடிவமைப்பு பயிற்சிகளை வழங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்.


இதன் பிரகாரம் இன்று அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அவர்கள் கட்டிடத் தொகுதிகளையும் கட்டிட வளாகத்தையும் பார்வையிட்டு அவற்றினது திருத்தப் பணிகள் குறித்தும் துறைசார்ந்தோரிடம் கேட்டறிந்து கொண்டார்.

தொடர்ந்து சங்கானைப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் அதன் தலைவர் பொதுமுகாமையாளர் உள்ளிட்டோருடன் கலந்துரையாடி சங்கம் எதிர்காலத்தில் இலாபம் ஈட்டக் கூடிய வகையில் முன்னெடுக்க வேண்டிய திட்டங்கள் குறித்தும் விசேடமாக ஆராயப்பட்டது.

இதன்போது சங்கானை ப.நோ.கூ. சங்கத்தின் தலைவர் குமாரசிங்கம் பொதுமுகாமையாளர் சிறிகணேசன் ஆகியோருடன் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அருந்தவநாதன் ஈ.பி.டி.பி.யின் வலிகாம இணைப்பாளர் ஜீவன் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.










0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’