வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 4 மே, 2011

உலகின் மிகப்பெரிய பயங்கரவாதியை அழித்தவர்கள் இலங்கையரே: டலஸ்

லகில் மிகப் பிரபலம் பெற்ற முதல்நிலை வகிக்கும் பயங்கரவாதியை அழித்தவர்கள் அமெரிக்காவன்றி இலங்கையர்களே என இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற செயலமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், 20 வருடங்களுக்கு முன்னர் கல்வியின் ஆரம்பமாக அ,ஆ என்றிருந்தது. இப்போது அது மாறி டிஜிடெல் தொழில் நுட்பமாகி விட்டது. எனவே 20 வருட சரித்திர மாற்றத்திற்கு ஈடுகொடுக்க நாம் தயாராகவேண்டும். சகலரும் கணனிக் கல்வியில் திறமை காட்டுவதன் மூலமே எதிர்காலம் சிறக்கும்.
பிரபாகரனுடன் ஒசாமா பின் லேடனை ஒப்பிட முடியாது. ஒசாமா இரண்டு தாக்குதல்களை மட்டுமே மேற்கொண்டு சுமார் 3ஆயிரத்து 500 பேரைக் கொண்டொழித்த சரித்திரம்தான் உண்டு.
ஆனால் பிரபாகரனுக்கு தற்கொலைப்படை ஒன்றே இருந்தது. 300 ற்கும் மேற்பட்ட தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. முப்படைகளும் முப்படைத்தளங்களும் இருந்தன. சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களது கொலைக்குக் காரணமாக பிரபாகரன் இருந்ததோடு 30 வருட ஆதிக்கம் கொண்ட அமைப்பாகவும் காணப்பட்டது.
எனவே உலகிலே மிகப் பெறிய அல்லது முதலாம் இலக்க பயங்கரவாதியைக் கொண்டவர்கள் இலங்கையரே என தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’