வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 31 மே, 2011

மேற்குலக அழுத்தங்கள் மனித உரிமை மீறலாகும் : பிரதமர்

னித உரிமை மீறல்களை தனி ஓர் அரசாங்கத்தினால் மாத்திரம் தடுத்து நிறுத்திவிட முடியாது. மனித உரிமைகள் குறித்து ஒவ்வொரு தனி மனிதனும் அறிந்திருக்க வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் அபிவிருத்தி அடைந்ததாகக் கூறும் சில நாடுகள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் மீது அழுத்தங்களை பிரயோகிக்கின்றன என பிரதமர் டி.எம். ஜயரத்ன சற்று முன் தெரிவித்தார்.



இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவும் மனித உரிமை பொதுமக்கள் ஸ்தாபனமும் இணைந்து இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று நடத்திய விசேட கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இன்று உலகம் முழுவதும் மனித உரிமைகள் பற்றிப் பேசப்படுகின்றன. ஆயினும் அது நடைமுறைப்படுத்தப்படுவதைப் பற்றி நாம் தெளிவாகச் சிந்திக்க வேண்டும்.
பயங்கரவாதத்தினால் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. இப்பயங்கரவாதத்தை இல்லாமல் செய்வது அரசாங்கத்தின் கடமையாகும். இன்றைய காலகட்டத்தில் முதலாம் உலக நாடுகள் மூன்றாம் உலக நாடுகள் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றன இதுவும் ஒரு வகையில் மனித உரிமைகள் மீறல் என பிரதமர் டி.எம்.ஜயரத்ன அங்கு மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’