வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 31 மே, 2011

இந்தியா வந்த ஜெர்மன் பிரதமர்-விமானத்தை அனுமதிக்காமல் துருக்கி மீது சுற்றவிட்ட ஈரான்!

சிய சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மன் பிரதமர் ஏஞ்ஜெலா மெர்கல் இன்று இந்தியா வந்தார். அவரது ஏர்பஸ் விமானம் தனது நாட்டின் மீது பறக்க ஈரான் ஆட்சேபித்ததால், விமானம் துருக்கிக்குத் திருப்பப்பட்டு அந் நாட்டு வான் பகுதியில் சுற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. கடைசியில் விமானத்தில் எரிபொருள் காலியாகத் தொடங்கியதையடுத்து தனது நாட்டின் மீது பறக்க, அந்த விமானத்துக்கு ஈரான் அனுமதி வழங்கியது.

இதனால் 2 மணி நேரம் தாமதமாக மெர்கல் டெல்லி வந்தார். அமைச்சர்கள், தொழிலதிபர்கள், அதிகாரிகள் என பெரிய குழுவுடன் ஆசிய பயணத்தை மேற்கொண்டுள்ளார் மெர்கல்.
டெல்லியில் இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேச்சு நடத்திய அவர் இரு நாட்டு தொழில்துறை, பொருளாதார வளர்ச்சி குறித்து ஆலோசித்தார். இந்தியாவில் ஜெர்மன் முதலீடுகளை அதிகரிப்பது குறித்தும் ஆலோசித்தார்.
அணு சக்தித் துறையில் இரு நாடுகளிடையே ஒத்துழைப்பு (ஜெர்மனியில் அணு உலைகள் அனைத்தையும் மூட மெர்கெல் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது), சர்வதேச செலாவணி நிதியமான ஐஎம்எப்புக்கு புதிய தலைவரை தேர்வு செய்வது ஆகியவை குறித்தும் மெர்கலும் மன்மோகனும் ஆலோசித்தனர்.

மேலும் இந்திய விமானப் படைக்கு ஐரோப்பிய நாடுகள் இணைந்து தயாரிக்கும் ஈரோபைட்டர் விமானத்தை வாங்க வைக்கவும் மன்மோகனுடன் மெர்கல் பேச்சு நடத்தினர். (விமானப் படைக்கு ரூ. 55,000 கோடியில் 126 போர் விமானங்கள் வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது)

பின்னர் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலையும் அவர் சந்திக்கிறார். இதைத் தொடர்ந்து அவர் சிங்கப்பூர் புறப்பட்டுச் செல்கிறார்.

முன்னதாக அவரது விமானம் நேற்று மாலை ஜெர்மனியின் பெர்லின் விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்குக் கிளம்பியது. இன்று அதிகாலை ஈரான் வான் வெளியில் அந்த விமானம் நுழைய இருந்தபோது, அதற்கு ஈரான் தடை விதித்தது. இதையடுத்து விமானம் ஈரான் வான் பகுதிக்குள் நுழைய முடியாமல் திரு்ம்பி துருக்கி வான் பகுதிக்குள் நுழைந்தது. அங்கேயே வானில் 1 மணி நேரம் வட்டமடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தனது வான் வெளிக்குள் நுழைய ஜெர்மனி முன் அனுமதி பெறவில்லை என ஈரான் கூறியுள்ளது. ஆனால், முன்பே அனுமதி வாங்கியதாகவும், கடைசி நேரத்தில் அதை ஈரான் ரத்து செய்து பிரச்சனை செய்ததாகவும் ஜெர்மனி கூறியுள்ளது.

அதே நேரத்தில் பிரதமர் மெர்கலின் விமானத்தைத் தொடர்ந்து 4 அமைச்சர்களுடன் வந்த இன்னொரு விமானத்தை ஈரான் எந்தப் பிரச்சனையுமின்றி அனுமதித்துவிட்டது. இதனால் அந்த விமானம் முன்பே டெல்லியில் தரையிறங்கிவிட்டது.

ஆனால், துருக்கி வான்வெளியில் சுற்றியபடியே ஈரான் அதிகாரிகளுடன் துருக்கி அதிகாரிகள் மூலமாக ஜெர்மன் அதிகாரிகள் 1 மணி நேரம் பேச்சு நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மெர்கலின் விமானத்துக்கு ஈரான் அனுமதி வழங்கியது.

இன்னும் சிறிது நேரம் வானில் வட்டமடித்திருந்தால், எரிபொருள் காலியாகி துருக்கியில் தரையிறங்க வேண்டிய நிலை அந்த விமானத்துக்கு ஏற்பட்டிருக்கும். டெல்லியை அடைவதற்கு மட்டும் தேவையான எரிபொருள் இருந்த நிலையில், அந்த விமானத்துக்கு ஈரான் அனுமதி வழங்கியது.

ஜெர்மன் பிரதமருக்காக வாங்கப்பட்ட புதிய ஏர்பஸ் விமானத்தில் மெர்கல் மேற்கொண்ட முதல் பயணத்திலேயே அவருக்கு இந்த அனுபவம் நேர்ந்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடையை விதித்துள்ள நிலையில் பதிலடியாக ஈரான் இந்த நடவடிக்கையில் இறங்கியதாகத் தெரிகிறது.

ஈரான் தூதரை அழைத்து ஜெர்மனி கண்டனம்:

இந் நிலையில் ஜெர்மனிக்கான ஈரான் தூதரை அழைத்த அந் நாட்டு வெளியுறவுத்துறை, பிரதமரின் விமானத்துக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’