வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 31 மே, 2011

பயங்கரவாதத்தை எதிர்நோக்கும் நாடுகள் இலங்கை அனுபவத்தில் வெற்றி பெறலாம்

யங்கரவாத நடவடிக்கைகளுக்கு முகங்கொடுத்துள்ள சர்வதேச நாடுகள் இலங்கையின் போர்வெற்றி அனுபவங்களை முன்னுதாரணமாகக் கொண்டு அவற்றை முறியடிக்க முடியும்' என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.

'யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த பல்லாயிரக் கணக்கான அப்பாவித் தமிழ் மக்களை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கைகளில் இலங்கை இராணுவத்தினர் பாரிய வெற்றிகண்டுள்ளமை வெளிப்படையானதாகும்.
ஜனநாயகம், ஒருமைப்பாடு, ஐக்கியம், பாதுகாப்பு மற்றும் மக்கள் நலன் நிமித்தம் நடத்தப்பட்ட இந்த இராணுவ மற்றும் மனிதாபிமான நடவடிக்கை, சர்வதேச நாடுகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்' எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கை இராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 'யுத்த வெற்றியின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் சர்வதேச கருத்தரங்கு' இன்று காலை கொழும்பு, கலதாரி ஹோட்டலில் ஆரம்பிக்கப்பட்டது.
தொடர்ந்து மூன்று தினங்களுக்கு நடைபெறவுள்ள இந்த கருத்தரங்கில் 41 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உயர்ஸ்தானிகர்கள், தூவர்கள், இராணுவ உயரதிகாரிகள், பாதுகாப்பு தரப்பு அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் என சுமார் 300 பேர் கலந்துகொண்டனர்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்ட இந்த கருத்தரங்கில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார செயலாளர் கருணாதிலக்க அமுனுகம, முப்படைத் தளபதிகள், பாதுகாப்பு படைகளின் பிரதானி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால், முப்படை மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள், அரசாங்க உயரதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்த கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக உயர்மட்டத்திலிருந்து கேணல் பதவிநிலையிலான மூன்று அதிகாரிகளையும் மேஜர் ஒருவரையும் இந்தியா அனுப்பி வைத்துள்ளது. அத்துடன் பாகிஸ்தானப் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் மேஜர் ஜெனரல் ஒருவரும் பங்களாதேஸிலிருந்து லெப்டினன் ஜெனரல் ஒருவரும் கருத்தரங்கில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
45 மில்லியன் ரூபா செலவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சர்வதேச கருத்தரங்கின் போது சீனாவின் ஆயுத தளபாட உற்பத்தி நிறுவனங்கள் இரண்டினது தயாரிப்புக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’