வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 18 மே, 2011

ஜனாதிபதி தலைமையிலான ஆட்சியின் கீழ் யாழ்ப்பாணத்தில் கல்வித்துறை மீண்டும் புத்துயிர் பெறுகிறது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

னாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையின் கீழான தற்போதைய ஆட்சியில் யாழ் மாவட்டத்தில் கல்விநிலை மீண்டும் புத்துயிர் பெற்று வருவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
யாழ் பொதுநூலகத்தில் இன்றைய தினம் (17) நடைபெற்ற இந்தியக் கல்விக் கண்காட்சி நிகழ்வின் ஆரம்பநாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாணத்தில் முதன்முதலாக இடம்பெறும் இந்தக் கல்விக் கண்காட்சியை ஏற்பாடு செய்தவர்களின் முயற்சியானது வரவேற்கத்தக்கது என்பதுடன் அவர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.
ஒரு காலகட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் கல்வியில் மிக உயர்ந்த நிலையில் இருந்து வந்த போதிலும் அதன்பின்னர் யுத்த சூழலால் கல்வித் துறையில் வீழ்ச்சி ஏற்பட்டது.
ஆனால் தற்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் தலைமையின் கீழான ஆட்சியின் கீழ் இம்மாவட்ட மாணவர்கள் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டி வருகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.
முன்பதாக பிரதம மற்றும் ஏனைய விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து கல்விக் கண்காட்சி மண்டபத்தினை யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.
மண்டபத்தில் இந்தியத் துணைத்தூதுவர் மகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் உரையாற்றும் போது, யாழ்ப்பாணத்தில் முதல்முதலாக இடம்பெறும் இக்கல்விக் கண்காட்சியானது எமது மாணவர்களுக்கு மிகவும் அவசியமானது என்பதுடன் உயர்தரப் பரீட்சை எழுதி பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்களின் அடுத்த கட்ட வாழ்வுக்கான வழிகாட்டியாக இதுபோன்ற கண்காட்சிகள் அமைகின்றன.
இதன்மூலம் இங்குள்ள மாணவர்கள் இந்தியாவிற்குச் சென்று கல்வி கற்பதற்கேற்ப சாதகமானதொரு நிலை தோன்றியுள்ளதுடன் இந்திய கல்வி நிறுவனங்கள் யாழ்ப்பாணத்தில் அலுவலகமொன்றை நிறுவி உயர்கல்வி தொடர்பிலும் அவை சார்ந்த தொழில் வாய்ப்புகள் தொடர்பிலும் ஆலோசனைகளையும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களின் கற்றல் நடவடிக்கைகள் உள்ளிட்ட ஏனைய விளக்கங்களையும் அதிதிகள் துறைசார்ந்தோரிடம் கேட்டறிந்து கொண்டனர்.

இன்றும் நாளையும் இக்கல்விக் கண்காட்சி நடைபெறவுள்ள நிலையில் இன்று ஆரம்பநாள் நிகழ்வில் இந்திய உயர்கல்வி நிறுவனங்களின் தலைவர் அஞ்சுபானர்ஜி யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா உள்ளிட்ட கல்வித்துறை சார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.




















0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’