வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 18 மே, 2011

ஷேன் வோர்னுக்கு 55 லட்ச ரூபா அபராதம்

ரா ஜஸ்தான் ரோயல்ஸ் அணித் தலைவரான ஷேன் வோர்னுக்கு 50,000 அமெரிக்க டொலர் (சுமார் 55 லட்சம் இலங்கை ரூபா) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆடுகளம் குறித்த சர்ச்சையில் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் சஞ்சய் திக்ஷித்தை திட்டியமைக்காகவே இந்த அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சர்ச்சை தொடர்பாக திக்ஷித், ஷேன்வோர்ன் இருவரையும் நேற்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருமாறு ஐ.பி.எல். ஒழுக்காற்று குழு அழைத்திருந்தது.
ஐ.பி.எல். தலைவரான சிராயு அமீன் மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் சுமார் 3 மணித்தியாலங்கள் விசாரணை நடத்தினர். அதன்பின் ஷேன் வோர்னுக்கு 50 லட்சம் டொலர் அபராதம் விதிப்பதாக மேற்படி ஒழுக்காற்றுக்குழு அறிவித்தது.
ஷேன் வோர்ன் ஏற்கெனவே மன்னிப்பு கோரிவிட்டதால் அவருக்கு அபராதம் மாத்திரம் விதிக்கப்பட்டதாகவும் இத்தகைய சம்பவம் மீண்டும் நடைபெற்றால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’