வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 10 மே, 2011

ஐ நா அறிக்கை குறித்து ஜனாதிபதி மீண்டும் விமர்சனம்

லங்கையின் ஐனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, மூத்த செய்தியாளர்களுடனான சிற்றுண்டி சந்திப்பை மேற்கொண்ட சமயத்தில் ஐ நாவின் அறிக்கையை விமர்சித்தார்.
மே 1 ஆம் தேதி நடைபெற்ற பேரணியிலும் இந்த அறிக்கையை ஐனாதிபதி விமர்சித்திருந்தார்.
இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ நா வின் பொதுச் செயலருக்கு ஆலோசனை கூற அமைக்கப்பட்ட நிபுணர் குழு தனது அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
போரின் போது அரச படையினரும் - புலிகளும் மனித உரிமை மீறல்களைப் புரிந்ததாக ஐ நா அறிக்கை தெரிவித்திருந்தது.
ஆனால், விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாத அமைப்பால் மனித கேடயமாக பிடித்து வைக்கப்பட்டிருந்த பொது மக்களை பாதுகாப்பு படையினர் மீட்டதாகவும் அதனால்தான் இந்த படை நடவடிக்கை மனித நேய நடவடிக்கையாக கூறப்படுகிறது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தம் வசமிருந்த பகுதியிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற 600 பொதுமக்களை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் கூறியதை ஐ நா நிபுணர்கள் கவனத்தில் கொள்ளவில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
உண்மை நிலவரங்களை நட்பு நாடுகளுக்கு தெரியப்படுத்துவோம் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஒரு பொதுமகன் கூட மோதல்களில் கொல்லப்படக் கூடாது என்பதற்காக
படையினருக்கு மனித உரிமைகள் குறி்த்து பாடம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
ஐ நாவின் அறிக்கையில் இலங்கை அரசு மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை அரசுக்கு ஆதரவாக வழமை போல இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகள் கருத்துக்களை தெரிவிக்காத நிலையில் - பிற நாடுகளின் ஆதரவை கோரிப் பெற வேணடிய நிலையில இலங்கை அரசு தற்போது இருப்பதாக நோக்கர்கள் கருதுகின்றனர்.
அதே நேரம் மனித நேய நடவடிக்கை என்று தனது போர் நடவடிக்கைகளை இலங்கை அரசு வர்ணித்துக் கொண்டாலும் -- போர் தொடர்பான செய்திகளை தடை செய்ய அது தன்னால் ஆன அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.
போர் பகுதிக்கு செல்ல செய்தியாளர்களுக்கு இலங்கை அரசு தடைவிதித்தது. அங்கிருந்த சர்வதேச மற்றும் உள்ளூர் மனிதநேயப் பணியாளர்களையும் அப் பகுதியில் இருந்து வெளியேற்றியது. இச் செயல்களும் வெகுவாக சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’