வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 10 மே, 2011

600 பேருடன் படகு கவிழ்ந்தது: நூற்றுக்கணக்கானோர் பலி என அச்சம்

லி பியாவிலிருந்து அகதிகளை ஏற்றிக்கொண்டு ஐரோப்பா நோக்கிச் சென்ற படகொன்று மத்திய தரைக்கடலில் கவிழ்ந்ததால் நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுவதாக அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலயம் (யூ.என்.எச்.சி.ஆர்.) தெரிவித்துள்ளது.
சுமார் 600 குடியேற்றவாசிகளுடன் சென்றுகொண்டிருந்த இப்படகு கடந்த வெள்ளிக்கிழமை கவிழ்ந்துள்ளது. இதுவரை 16 உடல்கள் மாத்திரம் கரையொதுங்கியுள்ளதாக அதிகாரிகள் நேற்று திங்கட்கிழமை அறிவித்தனர்.
லிபியா மீது நேட்டோ படைகள் தாக்குதல் நடத்திவரும் நிலையில் அங்கிருந்து மேற்படி குடியேற்றவாவசிகள் வெளியேற முற்பட்டுள்ளனர்.
மீட்பு நடவடிக்கைகளுக்கு யார் பொறுப்பாகவுள்ளனர் என்ற விபரம் வெளியாகவில்லை. எனினும் தமது கப்பல்களோ விமானங்களோ இம்மீட்பு நடவடிக்கையில் ஈடுபடவில்லை என நேட்டோ தெரிவித்துள்ளது.
குடியேற்றவாசிகளுடன் லிபியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு சென்றுகொண்டிருந்தபோது பல நாட்களாக அலைகழிந்த மற்றொரு கப்பலிலிருந்த 72 பேரில் 61 பேர் தாகத்தினாலும் பசியினாலும் இறந்ததாக செய்திகள் வெளியாகி ஒரு நாளின் பின்னர், 600 பேருடன் மேற்படி படகு கவிழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேட்டோ அமைப்பின் கப்பலும் ஹெலிகொப்டரும் 72 பேருடன் சென்ற படகு தத்தளித்துக் கொண்டிருப்பதை கண்டபோதிலும் புறக்கணித்து சென்றதாக குற்றம் சுமத்தப்படுகிறது. எனினும் நேட்டோ அமைப்பு அதை மறுத்துள்ளது.
குறித்த நாட்களில் இத்தாலிய யுத்த கப்பலான 'கரிபால்ட்டி' மாத்திரமே அப்பகுதியிலிருந்த நேட்டோ தலைமையிலான கப்பல் எனவும் அதுவும் 100 கடல் மைல் தொலைவிலேயே இருந்தாகவும் நேட்டோ தெரிவித்துள்ளது.
இந்நிலையில்' ஆபத்தான நிலையிலிருக்கும் படகுகளைக் கண்டால் உதவயளிக்குமாறு மத்திய தரைக்கடலில் செல்லும் கப்பல்களுக்கு யூ.என்.எச்.சி.ஆர். வேண்டுகோள் விடுத்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’