வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 20 மே, 2011

நெடியவன் நோர்வேயில் கைது

Fஓஸ்லோ: விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் நெடியவன் என்ற பேரின்பநாயகம் சிவபரன்  நோர்வேயில் கைது செய்யப்பட்டுள்ளார்
.விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பல மில்லியன் யூரோ நிதி வசூலிக்கப்பட்டது தொடர்பாக நெதர்லாந்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கும் நெதர்லாந்து நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந் நிலையில் அவர்களிடம் கிடைத்த சில முக்கிய தகவல்களை நோர்வே நாட்டிடம் வழங்கியுள்ளனர் நெதர்லாந்து போலீசார். இதன் அடிப்படையில் தான் நெடியவனை நார்வே போலீசார் கைது செய்து விசாரித்து வருவதாகத் தெரிகிறது.
இத் தகவலை நோர்வேயின் டிவி-2 தொலைக் காட்சி ( TV2 news Nyhetene) இன்று தெரிவித்தது. நெதர்லாந்து நாட்டு உளவுப் பிரிவினரின் கோரிக்கைப்படியே அவரிடம் விசாரணை நடப்பதாகவும் அந்தத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பு ஐரோப்பிய யூனியனால் 2006ம் ஆண்டு தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது. இந்த யூனியனில் உள்ள நாடுகளில் புலிகளுக்கு பணம் சேகரிப்பது சட்ட விரோதமாகும்.
இந் நிலையில் நெதர்லாந்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த ஆண்டில் ரோட்டர்டாம் நகர போலீசாரிடம் தந்த புகாரில், தன்னை ஒரு நபர் மிரட்டி பணம் பறிப்பதாகக் கூறியிருந்தார். இதே போன்ற புகார்கள் அதிகமாக குவிய ஆரம்பிக்கவே ரகசிய விசாரணை துவக்கப்பட்டது.
அதில் இந்தப் பணம் விடுதலைப் புலிகள் அமைப்பிற்குச் செல்வது உறுதியானது. இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் நெதர்லாந்து உளவுத் துறையினர் 16 இடங்களில் சோதனை நடத்தி 7 பேரை கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், தாங்கள் சேகரித்த பணத்தை யில் உள்ள நோர்வே நெடியவனுக்கு அனுப்பியதாகக் கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து நோர்வேயிடம் அவரை விசாரிக்கக் கோரியுள்ளது நெதர்லாந்து.
அவரை கைது செய்த ஓஸ்லோ போலீசார் நகர மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரிடம் மூடிய அறைக்குள் ரகசிய விசாரணை நடந்துள்ளது.
நோர்வேயில் உள்ள நெடியவன் வீட்டை உரிய அனுமதி பெற்று எல்-சல்வடார் நாட்டு போலீசாரும் சோதனையிட்டதாகத் தெரிகிறது. அந்த நாட்டிலும் பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’