வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 24 மே, 2011

புலிகளின் தலைவர்களை மீட்க ஐ.நா கப்பல் அனுப்ப முன்வந்தது: கே.பி.

யு த்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் தப்பிச் செல்வதற்கு கப்பலொன்றை அனுப்ப ஐ.நா.வும் மேற்குலக நாடொன்றும் முன்வந்ததாக குமரன் பத்மநாதன் (கே.பி.) இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "2009 ஜனவரியில் நாம் யுத்தத்தை நிறுத்த முயற்சித்தோம். யுத்தத்தை நிறுத்த பகல் இரவாக நான் கடுமையாக முயற்சித்தேன். ஆனால் விசேடமாக எமது தரப்பிலிருந்து கடைசி தருணம் வரை அதற்கு ஆதரவளிக்கவில்லை. எனவே நான் நம்பிக்கை இழந்தேன்.

கடைசி தருணத்தில் மே 16 17 அல்லது 15 ஆம் திகதியளவில் அவர்கள் (தமிழீழ விடுதலைப் புலிகள்) வெளியேற தயாரா என ஐ.நாவும் மற்றnhரு வெளிநாட்டு அரசாங்கமும் கேட்டன. அவர்கள் எங்கேனும் செல்வதற்கு கப்பலொன்றை அனுப்பத் தயார் என தெரிவித்தனர்" என தெரிவித்துள்ளார்.
அது எந்த நாடு என கேட்கப்பட்டபோது, "அது ஐ.நாவும் மற்றொரு நாடுமாகும். அந்த நாட்டின் பெயரை நான் குறிப்பிட மாட்டேன். ஆனால் அது ஒரு மேற்கு நாடாகும் "என கேபி. கூறியுள்ளார்.
அவர்கள் உங்களை காப்பாற்ற முயன்றார்களான என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், "ஆம் காப்பாற்ற முயன்றார்கள். ஆனால் அது மிக கால தாமதமாகிவிட்டது. 2009 ஜனவரியிலிருந்து எமது ஒவ்வொரு அசைவும் மிகத் தாமதமாகியிருப்பதை நான் அவதானித்தேன்" என கே.பி. தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’