வ ன்னிப் போரில் கொல்லப்பட்ட, அநாதைகளாக்கப்பட்ட, விதவைகளாக்கப்பட்ட, உறவுகளை இழந்த, காணாமல் போன, ஊனமுற்ற, காயமடைந்த, சொத்து அழிவுகளைச் சந்தித்த, சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட, பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட, தடுப்புக்காவலில் உள்ள, சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகளாக உள்ள மக்களுக்கு நீதி கிடைப்பதை சர்வதேசம் உறுதிப்படுத்த வேண்டும் என்பதையும், சர்வதேச உத்தரவாதத்துடன் கூடிய தன்னாட்சி கொண்ட தமிழ் அரசை நிறுவ தமிழக முதல்வரான ஜெயலலிதாவும், தமிழக அரசும், தமிழக மக்களும் துணை நிற்க வேண்டும் என்று ஈழத் தமிழர்கள் எதிர்பார்ப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்
.அண்மையில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் தங்கள் கட்சியின் தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றியீட்டி, மூன்றாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்கும் ஜெ.ஜெயலலிதாவுக்கு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே எம்.கே. சிவாஜிலிங்கம் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இச்சந்தர்ப்பத்தில் தங்களுக்கு ஈழத்தமிழர்களின் சார்பில் எமது கட்சி நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும்,தெரிவிப்பதில் பெருமிதம் அடைகின்றது.
வன்னியில் போர் நடைபெற்ற பொழுது போர் நிறுத்தம் கோரி நீங்கள் நடத்திய போராட்டங்கள்,பிரச்சாரங்கள் இந்தியாவை மட்டுமல்ல,இலங்கையையும் கலக்கமடைய வைத்தமையை யாவரும் அறிவர்.
2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி சென்னை சேப்பாகத்தில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தை ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்தாது இருந்ததை உண்ணாவிரத மேடையில் தங்களுக்கு பொன்னாடை அளித்து கூட இருந்தவன் என்ற முறையில் எண்ணிப்பார்க்கிறேன். எமது மக்கள் துன்பத்தில் துடித்த பொழுது தங்களின் தாயுள்ளத்தை நெஞ்சார வாழ்த்தியதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
போர் உச்சக் கட்டத்தில் இருந்த பொழுது பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தங்களைச் சந்தித்த ஈழத்தமிழர்களின் ஒரே மக்கள் பிரதிநிதி நான் என்பதை தங்களுக்கு நினைவூட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறேன்.
இந்தியத் தலைநகர் புதுடில்லியில் பாராளுமன்றத்துக்கு முன்பாக இலங்கையில் போர்நிறுத்தம் கோரி தலைவர் வைகோ நடத்திய உண்ணாவிரதத்தை நான் ஆரம்பித்து வைத்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் திரு. அத்வானி உட்பட பல கட்சித்தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்த நிகழ்ச்சிக்கு தங்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்பியதையும் எண்ணிப் பார்க்கின்றேன். இந்தியாவின் தவறான வெளியுறவுக் கொள்கையைத் துணிச்சலுடன் கண்டித்த மாபெரும் தலைவியாக உங்களை மக்கள் பார்க்கின்றார்கள்.
2009ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுடைய கட்சி தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் இப்பொழுது கிடைத்த வெற்றியைப் போல மாபெரும் வெற்றியைப் பெற்றிருந்தால், இலங்கையில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட 50,000 தமிழ் மக்களில் ஆகக் குறைந்தது அரைவாசிப் பேரையாவது காப்பாற்றி இருக்க முடியும்.
இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவின் தவறான வெளியுறவுக் கொள்கைக்குக் காரணமாக இருந்த தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியைத் தமிழகத்தில் தோற்கடித்து ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தி உள்ளீர்கள்.
தேர்தலில் வெற்றி பெற்றவுடன் இலங்கைப் பிரச்சினை சம்பந்தமாக சர்வதேச நீதி விசாரணை தேவை என்றும், தமிழர்கள் சரிசமமாக நடத்தப்பட வேண்டும் என்றும் குரல் எழுப்பியமை எங்களுக்குப் புதிய நம்பிக்கையையும் தெம்பையும் ஊட்டியுள்ளது.
தங்களுடைய பதவிக்காலத்தில் தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறவும், தமிழகத்திற்கு சிறப்பான எதிர்காலம் கிட்ட வேண்டும் எனவும் வாழ்த்துகின்றோம்.
கடந்த ஒன்றரை ஆண்டுகள் எனக்கு இந்தியாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வரும் நிலையில், நேரில் வாழ்த்துக்களைத் தெரிவிக்க முடியாத காரணத்தால் தொலைநகல் மூலம் இந்தச் செய்தியை அனுப்பி வைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டமையைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தமிழக முதலமைச்சராகப் பதவி ஏற்றுள்ள தங்களுக்கு நீண்ட கால ஆயுளையும், நல்ல ஆரோக்கியத்தையும், சகல வளங்களையும் வழங்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து மீண்டும் ஈழத்தமிழர்களின் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துகொள்கின்றேன்." என குறிப்பிடப்பட்டுள்ளது. _

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’