வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 23 மே, 2011

போரினால் உயிர் நீத்தவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை என்பது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் மகிழ்ச்சியான இயல்பு வாழ்கையிலேயே தங்கியுள்ளது - ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்

போ ரினால் உயிர் நீத்தவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை என்பது அந்த போரின் போது பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான மகிழ்ச்சியான இயல்பு வாழ்க்கையினை ஏற்படுத்திக் கொடுப்பதிலேயே தங்கியுள்ளது என ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
நேற்று (21) காலை முல்லைத்தீவு மாவட்டத்தில் வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற போரில் உயிர் நீத்தவர்களுக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு இன்று நாட்டில் அமைதிச் சூழல் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தங்களுடைய உயிர்களை நீத்த அனைவருக்கும் நாம் அஞ்சலி செலுத்த வேண்டும். அத்தோடு தோற்றுவிக்கப்பட்டுள்ள இயல்புச் சூழலை தொடர்ந்து பாதுகாப்பதோடு இந்த நாட்டிலுள்ள அனைத்து இன மக்களும் சமத்துவமாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும். இதனை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை உண்டு எனத் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று வரை மீள்குடியேற்றம் நடைபெறாத பிரதேசங்களில் விரைவான மீள்குடியேற்றத்தை மேற்கொள்வதற்கு படையினர் உள்ளிட்ட அனைவரும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாரூக் முஸ்தபா வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் மாவட்டங்களின் அரச அதிபர்கள் வடக்கு மாகாண சபையைச் சேர்ந்த உயரதிகாரிகள் பிரதேச செயலர்கள் பிரதேச சபை செயலாளர்கள் அரச திணைக்களங்களின் உயரதிகாரிகள் மாணவர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

















0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’