கி ழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என்று அழைக்கப்படும் எட்வின் கிருஸ்னாந்தராஜா கைது செய்யப்பட்டமையையும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டதையும் கண்டித்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் இன்றைய சபைக் கூட்டத்தை பகிஷ்கரித்தனர்.
அத்துடன் கைதுசெய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எட்வின் கிருஸ்னாந்தராஜாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பவும் அவர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர்.
மாகாண சபை உறுப்பினர்களின் பகிஷ்கரிப்பு காரணமாக சபை அமர்வு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்றைய அமர்வில் முதலமைச்சர் சிவனேதுரை சந்திரகாந்தன் கலந்துகொள்ளவில்லை.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எட்வின் கிருஸ்னாந்தராஜா கடந்த திங்கட்கிழமை கொழும்பிலிருந்து சென்ற இரகசிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’