வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 19 மே, 2011

முள்ளிவாய்க்கால் படுகொலைகள்: லண்டனில் தமிழர்கள் விழிப்புப் போராட்டம்

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவும் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீன சர்வதேச விசாரணை நடத்துமாறு கோரியும் லண்டன் நகரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் நேற்று புதன்கிழமை இரவு கண்விழிப்புப் போராட்ட நிகழ்வொன்றில் பங்குபற்றினர்.
மத்திய லண்டன் ட்ரபால்கர் சதுக்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்வை பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்திருந்தது.
சுயாதீன சர்வதேச விசாரணையொன்றுக்கு அனுசரணை வழங்குமாறு பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோனுக்கு அனுப்பிய கடிதமொன்றில் பிரித்தானிய தமிழர் பேரவை கோரியுள்ளது.
இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தும் என்பதில் தமக்கு நம்பிக்கையில்லை என அக்கடிதத்தில் பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
போர்க் கைதிகள் கூட்டாக படுகொலை செய்யப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ உட்பட பல ஆதாரங்கள் இருந்த போதிலும் இவை குறித்து விசாரணை நடத்த வேண்டுமென்ற கோரிக்கையை இலங்கை அரசாங்கம் புறக்கணிப்பதாகவும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது சுயாதீன விசாரணைக்கான சர்வதேச அழுத்தங்களை திசை திருப்புவதற்கான முயற்சி எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரிட்டனின் ஆளும் கூட்டணிக் கட்சிளான கன்சர்வேட்டிவ் கட்சி, லிபரல் ஜனநாயகக் கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்நிகழ்வில் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’